பீகார் மாநிலத்தில் நீண்ட இழுபறிக்கு இடையே காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாட்டின் 17வது மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. பீகார் மாநிலத்தில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவியதாக கூறப்பட்டது. இந்நிலையில் பீகாரில் மொத்தம் உள்ள 40 இடங்களில் லாலு தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணியில் காங்கிரசுக்கு 9 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பீகார் ஆர்.ஜே.டி தலைவர் ராம் சந்திரபாவ் அறிவித்தார். பீகாரில் லாலு தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் 20 இடங்களில் போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகள் முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி, பீகார் மாநில முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக ஜிதன்ராம் மாஞ்சி கூறுகையில், கூட்டணியில் எனது கட்சிக்கு 5 இடங்களை ஒதுக்க கோரினோம். தற்போது கூட்டணியின் நலனுக்கு ஏற்ப அதிக இடங்களை கேட்கவில்லை. ஆனால் உபேந்திர குஷ்வாகாவின் ஆர்.எல்.எஸ்பி கட்சியை விட ஒரு இடமாவது கூடுதலாக கிடைக்கவேண்டும் அவ்வளவுதான் என தெரிவித்தார்.
Recent posts
2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)
2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன
ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்
பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்
புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
புதிய பாதையை நோக்கிய கனடா
கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்
தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்
தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.
அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...




