ஆரோக்கிய சமையல் ஆரோக்கியம் பொது மருத்துவம்

காளானில் உள்ள மருத்துவப் பயன்கள்.

இன்று பலரும் காளானைப் பயன்படுத்தி பலவகையான சுவையுடைய உணவுகளைத் தயார் செய்கின்றனர். ஆனால், இதைப் பயன்படுத்துவோருக்கு இதன் மருத்துவப் பயன்கள் பற்றி தெரிவதில்லை. காளானில் அதிகளவு இரும்புச்சத்து, துத்தநாகச்சத்து, காப்பர், வைட்டமின் முஇ ஊஇ னுஇ டீஇ கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடென்டுகள், பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளது.

👉 காளானில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளது. ஆனால், இவை அனைத்துமே சாப்பிடக்கூடியது அல்ல. ஏனெனில் அதில் பலவகை காளான்கள் விஷத்தன்மையும் கொண்டவை. இப்போது காளான்களில் உள்ள மருத்துவக் குணங்களைப் பற்றி இங்கு காண்போம்.

காளானில் உள்ள நன்மைகள் :

👉 காளானில் குறைந்த அளவு சோடியம் மற்றும் அதிகளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் உள்ள கெட்டக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

👉 காளானில் உள்ள பாலிசாக்கரைடு, பலவகை நோய்களைத் தடுத்து ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும் காளானில் உள்ள டுநவெலளiநெஇ நுநசவையனநnin எனும் வேதிப்பொருட்கள், இரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, இரத்தத்தை சுத்தமாக்கி, இதயத்தின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது.

👉 தினந்தோறும் காளான் சு+ப் அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

👉 காளானில் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் அதிகம் உள்ளதால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

👉 பட்டாணி, பால், முட்டை, மீன், கோழி போன்ற உணவுப்பொருட்களைக் காட்டிலும் காளானிலேயே அதிகம் புரதச்சத்து உள்ளது. சராசரியாக 100 கிராம் காளானில் 35 சதவீதம் அளவுக்கு புரதச்சத்து உள்ளது.

👉 காளான் சாப்பிடுவதால், ஆஸ்துமா போன்ற சுவாசக்கோளாறு பிரச்சனைகளைத் தடுப்பதுடன், உடலில் ஏற்படும் காயங்களை எளிதில் குணமாக்கலாம்.

👉 நார்ச்சத்து காளானில் அதிகளவு உள்ளது. எனவே காளானை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அது சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவும்.

👉 மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றப் பிரச்சனைகளை குணமாக்க காளான், முட்டைகோஸ், பச்சைப் பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து சு+ப் வைத்து சாப்பிடலாம்.

காளான் யாரெல்லாம் சாப்பிடக் கூடாது எனத் தெரியுமா ?

👉 கீல்வாதம் பிரச்சனை உள்ளவர்கள் காளானை அடிக்கடி உணவில் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.

👉 அதேபோல் காளான் உணவுகளை நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும். பச்சையாக சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

👉 காளான் தாய்ப்பாலை வற்ற வைக்கும் தன்மை கொண்டதால், பாலு}ட்டும் தாய்மார்கள் காளான் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

Recent posts

பெண்களின் உடல்நலப் புரிதலில் ஆழமான ஆய்வு

பெண்களின் உடலைப் பற்றிய ஆய்வு: தமிழ்நாட்டின் சூழலில் ஒரு முழுமையான பார்வை பெண்களின் உடல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் (Reproductive Health) என்பது ஒரு சிக்கலான, பன்முகத்...
Thamil Paarvai

உலகப் பெண்களின் உடல் நலம்: ஓர் உலகளாவிய ஆய்வு (2025-2026)

பெண்களின் உடல் நலம் என்பது உயிரியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சாரக் காரணிகளின் சிக்கலான இணைப்பாகும். உலகம் முழுவதும், பெண்கள் தனித்துவமான உடல்நல சவால்களை எதிர்கொள்கின்றனர் –...
Thamil Paarvai

கருவில் குழந்தையின் நிலைகள் (Fetal Malpresentation) – தெளிவான வழிகாட்டி

“ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் ஒரு அதிசயம். ஆனால், சில குழந்தைகள் தாயின் வயிற்றில் சரியான நிலையில் இருப்பதில்லை. அந்தச் சமயத்தில், அறிவும், விழிப்புணர்வும் தாய்க்கும், குழந்தைக்கும் பாதுகாப்பை...
Thamil Paarvai

நீரிழிவு நோய் எப்படி உண்டாகிறது? – உங்கள் நோய் பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்

“நீரிழிவு என்பது ஒரு நோய் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறையின் எச்சரிக்கை. ஆனால், அதைத் தெரிந்துகொண்டால், அதை வெல்லலாம்.” மெளனமாக நெருங்கும் கொடிய நோய் நீரிழிவு...
Thamil Paarvai

உடற்பயிற்சிக்கு சிறந்த நேரம்: காலையா, மாலையா?

உடற்பயிற்சி செய்வதற்கு சிறந்த நேரம் எது என்ற கேள்விக்கு ‘ஒரே ஒரு பதில்’ இல்லை. ஏனெனில், உங்கள் இலக்குகள், உடலின் உயிரியல் கடிகாரம் (circadian rhythm), மற்றும் உங்கள்...
Thamil Paarvai

தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகை நேரம்

நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம் போன்றவற்றின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நீங்கள் குளிகை நேரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். யார் அந்த...
Thamil Paarvai

அடிக்கடி சளி தொல்லையா?

🤧 சளி பிடித்தல் என்பது பொதுவான பிரச்சனையாகும். சிலருக்கு கால சூழ்நிலையின் காரணமாகவோ, அருகில் இருப்பவருக்கு சளி பிடித்திருந்து நோய்த்தொற்று ஏற்பட்டாலோ சளி பிடிக்கலாம். ❄️ குளிர்காலம்...
Thamil Paarvai

பெரியோர்களை பார்த்தால் காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?

ஆசீர்வாதம் என்றால் என்ன? 🙇 ஆசீர்வாதம் என்பது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம்...
Thamil Paarvai

இரத்தத்தை சுத்தமாக்க உதவும் சில உணவு வகைகள்

எமது உடலில் ஓடும் இரத்தமானது உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்குவகிக்கிறது. இதனால் இரத்தத்தை சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகிறது. உடலின் எல்லா செயற்பாடுகளுக்கும் இரத்தம் இன்றியமையாதது. இரத்தத்தில்...
Thamil Paarvai

Leave a Comment