
பிரபல வயலின் இசைக்கலைஞரான குன்னக்குடி வைத்தியநாதன் 1935ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் குன்னக்குடியில் பிறந்தார். இவரது சகோதர, சகோதரிகள் அனைவருமே இசைக்கலைஞர்கள்.
வயலின் கற்றுக்கொண்டு தனது 12வது வயதில் முதல் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று தந்தைக்கு பெருமை சேர்த்தார். 1976ஆம் ஆண்டு முதல் வயலின் இசையை கொண்டு கச்சேரி செய்தார்.
1969ஆம் ஆண்டு ‘வா ராஜா வா” என்ற திரைப்படத்திற்கு முதன்முதலாக இசையமைத்தார். இசைப்பேரறிஞர், சங்கீத நாடக அகாடமி, சங்கீத கலாசிகாமணி, கலைமாமணி, பத்மஸ்ரீ உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
‘வயலின் சக்கரவர்த்தி” என்று போற்றப்பட்ட குன்னக்குடி வைத்தியநாதன் 2008ஆம் ஆண்டு மறைந்தார்.