காலச் சுவடுகள்

கைப்பந்து போட்டி கண்டுபிடிக்கப்பட்ட நாள்

கைப்பந்தாட்டம் அல்லது கரப்பந்தாட்டம் (volleyball) என்பது ஒரு அணிக்கு ஆறு பேர் வீதம், வலைக்கு இருபுறமும் நின்று கைகளால் பந்தைத் தட்டி எதிர்ப்பக்கம் அனுப்பும் விளையாட்டு ஆகும். பந்தை எதிரணியினரால் மூன்றே தட்டுதல்களில் திருப்பி அனுப்ப இயலவில்லை என்றாலோ, அவர்கள் பகுதிக்குள் தரையில் விழுந்தாலோ, மற்றைய அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.

சமதளம், பெரும்பாலும் உள் அரங்கில் விளக்குகள் ஒளியில் ஆடப்படும் விளையாட்டு. களத்தின் நடுவில் வலையும், அதன் இரு புறமும் 3 அடியில் ஒரு கோடும் போடப்பட்டிருக்கும். எந்த வீரரும் அந்தக் கோட்டைத் தாண்டி வலையருகில் கால் வைத்தாலோ, வலையில் உடலின் எந்தப் பகுதியாவது பட்டாலோ, தப்பாட்டமாக (Foul) கருதப்படும். வலையின் மேல்மட்ட உயரம் ஆண்களுக்கு 2.43 மீட்டராகவும், பெண்களுக்கு 2.24 மீட்டராகவும் இருக்கும்.

முழங்கை வரையிலும், விரல்களாலும் பந்தை தட்டி மேலெழும்பச் செய்யலாம். எழும்பிய பந்தை எதிரணி பக்கம்  உள்ளங்கையால் அடிக்கலாம். ஒருவர் தொடர்ந்து ஒரு முறைக்கு மேல் பந்தை தட்டக் கூடாது. பந்து தங்கள் பக்கம் வந்ததும் மூன்று தட்டுதலுக்கு மிகாமல் எதிரணி பக்கம் திருப்பியனுப்ப வேண்டும்.

பந்தை முதலில் தட்டுதல் ‘சர்வீஸ் (தொடக்க வீச்சு)’ எனப்படும். இது எல்லைக் கோட்டிற்கு வெளியே இருந்து வலையில் மோதாமல் எதிரணியினரின் பகுதிக்கு செலுத்த வேண்டும். எதிரணி பக்கத்தில் இருந்து வரும் பந்தை வலை அருகிலேயே (blocking) தடுத்தாடல் எனப்படும். *வாலிபால் விளையாட்டு அமெரிக்க விளையாட்டு பயிற்சியாளர் வில்லியம் மோர்கன் என்பவரால் 1895-ல் உருவாக்கப்பட்டது.

ஒலிம்பிக்கில் 1964-ம் ஆண்டு வாலிபால் இரு பாலருக்குமாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. பீச் வாலிபால் எனும் கடற்கரையில் ஆடும் வாலிபால் ஆட்டத்தில் ஒரு அணிக்கு இருவர் மட்டுமே ஆடுவார்கள். 1940-களில் அமெரிக்காவில் ஆடப்பட்ட இந்த வகை தற்போது பல நாடுகளிலும் பரவி, ஒலிம்பிக்கில் 1996-ம் ஆண்டு சேர்த்துக் கொள்ளப்பட்டது.

Recent posts

மோன்டால்சினி

💉 மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரபல நரம்பியலாளர் ரீட்டா லெவி மோன்டால்சினி (சுவைய டுநஎi ஆழவெயடஉini) 1909ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்....
Thamil Paarvai

விளாதிமிர் லெனின்

👉 ‘லெனின்” என்ற பெயரிலேயே உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட விளாதிமிர் லெனின் 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள சிம்பிர்ஸ்க் என்ற நகரில்...
Thamil Paarvai

சரோஜினி நாயுடு இன்று இவரின் நினைவு தினம்.

இந்தியாவின் ‘கவிக்குயில்” என்று அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு 1879ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தார். இவருக்கு சிறுவயதில்...
Thamil Paarvai

குன்னக்குடி வைத்தியநாதன்.

பிரபல வயலின் இசைக்கலைஞரான குன்னக்குடி வைத்தியநாதன் 1935ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் குன்னக்குடியில் பிறந்தார். இவரது சகோதர, சகோதரிகள் அனைவருமே இசைக்கலைஞர்கள். வயலின்...
Thamil Paarvai

எம்.கே.தியாகராஜ பாகவதர்.

🎼 தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் 1910ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள மாயவரத்தில் (தற்பொழுது மயிலாடுதுறை) பிறந்தார்....
Thamil Paarvai

ஏ.என்.சிவராமன்.

📰 பத்திரிக்கை உலக ஜாம்பவான் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரான ஏ.என்.சிவராமன் 1904ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் பிறந்தார். 📰 இவர்...
Thamil Paarvai

இராஜேந்திர பிரசாத் இன்று இவரின் நினைவு தினம்.

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் 1884ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி பீகாரில் பிறந்தார். இவரை மக்கள் பாபுஜி என்று அன்புடன் அழைத்தனர். புகழ்பெற்ற...
Thamil Paarvai

தி. ஜானகிராமன்

நவீன இலக்கிய எழுத்தாளரான தி.ஜானகிராமன் 1921ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள தேவக்குடியில் பிறந்தார். இவர் கல்லூரியில் படித்தபோதே, விடுதலைப்...
Thamil Paarvai

தேசிய அறிவியல் தினம்

தியாகிகளை கொண்டாடுவதுபோல அறிவியல் அறிஞர்களும் போற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 1987ஆம் ஆண்டு தேசிய அறிவியல் தினம் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அறிவியலின் சிறப்பை இளம்தலைமுறை மாணவர்களுக்கு...
Thamil Paarvai

Leave a Comment