ஒன்ராறியோவில், நேற்று புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 1 691 ஆக குறைந்துள்ளது.
இதனால் கடந்த வாரம் 2 430 ஆக இருந்த ஏழு நாள் சராசரி தொற்றாளர் எண்ணிக்கை நேற்று 1 878 ஆக சரிந்துள்ளது.
மேலும், ஒன்ராறியோவில் தற்போது தொற்றுக்கு சிகிச்சை பெறுகின்றவர்களின் எண்ணிக்கையும், 20 672 ஆக குறைந்துள்ளது. கடந்த வாரம் இந்த எண்ணிக்கை 26 656 ஆக இருந்தது.