இலங்கையில் 600,000 பேர் தங்களது இரண்டாவது அஸ்ரா செனகா அளவுகளுக்காக காத்திருப்பதால், அஸ்ரா செனகா தடுப்பூசிகளை தருவிக்கும் செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முதன்மை ஆலோசகர் லலித் வீரதுங்கவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எந்த விலையிலும் அஸ்ரா செனகா குப்பிகளை கொள்வனவு செய்யுமாறு வீரதுங்கவுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார் என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
ஏற்கனவே அஸ்ரா செனகா குப்பிகளை வைத்திருக்கும் பல நாடுகளிடம் இலங்கை அதிகாரிகளால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் மூன்றாம் தரப்பினரிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் அஸ்ரா செனகா போலியானதாக இருக்கக்கூடும் என்று அஸ்ரா செனகா நிறுவனம் ஏற்கனவே இலங்கையை எச்சரித்திருந்தது.
ஆரம்பத்தில் குப்பிகளை தருவதாக வாக்குறுதியளித்த சீரம் நிறுவனம், இந்தியாவின் உள்ளூர் தேவை அதிகரித்தமையால் ஏற்றுமதியை நிறுத்த வேண்டியேற்பட்டமை குறிப்பிடத்தக்கது.