அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைஸர் தடுப்பூசியின் 26,000 தொகுதி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
அதன்படி, இந்த பைசர் தடுப்பூசியை விரைவில் மக்களுக்கு விநியோகிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த பைஸர் தடுப்பூசியை தெற்காசிய நாடுகளில் இலங்கைக்கே முதன்முதலில் கிடைக்கப்பெற்றுள்ளது.