டி. ராஜேந்தர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து தனது மகனின் திருமணத்திற்கு அழைப்பிதழ் அளித்துள்ளார்.
சிம்புவின் தம்பி குறளரசனுக்கும், நபீலா அகமது என்கிற பெண்ணுக்கும் வரும் 26ம் தேதி நிக்காஹ் நடைபெறுகிறது. இதையடுத்து வரும் 29ம் தேதி ஐடிசி சோழா ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அப்பா டி. ராஜேந்தர் தனது இளைய மகன் குறளரசனை அழைத்துக் கொண்டு முக்கிய திரையுலக பிரபலங்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டிற்கு சென்ற டி. ராஜேந்தர் தனது மகனின் திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். ரஜினி குறளரசனை ஆசிர்வதித்ததுடன் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்.