
பெருந்தொற்று காலத்தில் நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று மாஸ்க்கை தவறாமல் பயன்படுத்து தான். ஒரு நல்ல தரமான மாஸ்க் தொற்றுநோயின் தாக்கத்தை 70% வரை தடுக்கலாம் மற்றும் குறைக்கலாம். அதோடு பிற நோய்களை உருவாக்கும் கிருமிகள் பரவுவதையும் தடுக்கும். என்ன தான் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தும் மாஸ்க்குகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், தற்போது ஏராளமானோர் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி மாஸ்க்குளைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் ஒரு மாஸ்க்கை பலமுறை பயன்படுத்துவது நல்லதா மற்றும் இது கொரோனா வருவதைத் தடுக்குமா, எப்போது மாற்ற வேண்டும் என்று பலரது மனதிலும் கேள்விகள் எழலாம். ஒரு புதிய ஆய்வின் படி, பெருந்தொற்று காலத்தில் மாஸ்க் பயன்படுத்தாமல் இருப்பதை விட, மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாஸ்க்குகள் தொற்றின் ஆபத்தை அதிகரிப்பதோடு மிகவும் மோசமாக்கும் என்பது தெரிய வந்துள்ளது. இப்போது அந்த ஆய்வு குறித்து விரிவாக காண்போம்.
ஆய்வு கூறுவது என்ன?
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, அறுவைச்சிகிச்சை மாஸ்க்குளை ஏன் மீண்டும் பயன்படுத்துவது நல்லதல்ல என்பதற்கான முக்கிய காரணம், அதன் வடிவம் மற்றும் துணி வகையும் தான். பொதுவாக மாஸ்க்குகளை தொடர்ச்சியாக துவைத்துப் பயன்படுத்தும் போது, அது அதன் வடிவத்தை இழக்க முனைகின்றன. மேலும் மாஸ்க்குகள் ஒரு வகையான உறிஞ்சக்கூடிய லேயரை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால், அதை பலமுறை துவைத்து பயன்படுத்தும் போது, காலப்போக்கில் அந்த லேயரின் செயல்திறன் குறைந்துவிடுகிறது.

மாஸ்க்கின் துணி வகை முக்கியம் .
அறுவைசிகிச்சை மாஸ்க்கை அணிந்து கொண்டு ஒருவர் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார் என்பதை அறிய விஞ்ஞானிகள் ஒரு கம்ப்யூட்டர் மாதிரியை பயன்படுத்தினர். அதில் தான் இது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மாஸ்க்கை பலமுறை துவைத்து பயன்படுத்தும் போது மாஸ்க்கின் துணி வகை மற்றும் நிலை தொற்றின் அபாயத்தை அதிகரிப்பதையும் ஆய்வில் காண முடிந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக புதிய மாஸ்க்குகள் நல்ல பாதுகாப்பையும், செயல்திறனையும் வழங்குகின்றன. ஆனால் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மாஸ்க்குகள் இதை மிகவும் குறைவாகவே செய்கின்றன. அதோடு இந்த வகை மாஸ்க்குகள் 60%-க்கும் குறைவாகவே வைரஸ்களை வடிகட்டவும் செய்கின்றன.
மாஸ்க் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய அல்லது அறுவை சிகிச்சை மாஸ்க்குகளை தேர்ந்தெடுக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான காரணி, அந்த மாஸ்க்கின் துணி வகையைப் பார்க்க வேண்டும். ஒரு மாஸ்க்கின் துணி மலிவான தரத்துடன் இருந்தால், அது நீண்ட கால பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்காது.

ட்ரெண்டி மாஸ்க்குகள் ஆபத்தானவை.
ட்ரெண்டியான மாஸ்க்குளைப் பயன்படுத்தும் போது கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று என்னவெனில், மாஸ்க்குகள் நன்கு ஃபேஷனாக காணப்பட்டாலும், அதில் அதிகப்படியான நூல், சீக்வின்கள் அல்லது தரம் குறைவான துணி ஆகியவற்றைக் கொண்டு டிசைன் செய்யப்படுவதால், இம்மாதிரியான மாஸ்க்குகள் பயனுள்ளதாக இருக்காது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆகவே ஒரு நல்ல தரமான மாஸ்க் முகத்தை மூடி மறைக்கும் நோக்கத்தைக் கொண்டவையாக இருக்க வேண்டும். முக்கியமாக இதில் எவ்வித துளைகளோ, நுண்ணிய புள்ளிகளோ இல்லாமல் இருக்க வேண்டும் மற்றும் வாய் மற்றும் மூக்கை முழுமையாக மூடும் வகையிலும் இருக்க வேண்டும்.
நல்ல தரமான மாஸ்க்கை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்.
எப்படி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மாஸ்க்குளை எப்போதும் நீண்ட காலம் பயன்படுத்தக்கூடாதோ, அதேப் போல் மீண்டும் துவைத்துப் பயன்படுத்தக்கூடிய மாஸ்க்குகளுக்கும் காலாவதி தேதிகள் உள்ளன. அதை மாற்றுவதற்கான சிறந்த நேரமானது ஒருசில காரணிகளைப் பொறுத்தது. அதில் பயன்படுத்தும் முறை, எவ்வளவு தடவை துவைக்கிறோம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, புதிய மாஸ்க்குகளை வாங்க வேண்டும். அதிலும் நீங்கள் அடிக்கடி பயணிப்பவர், அதிக நபருடன் தொடர்பு கொள்பவர் அல்லது மருத்துவ சமூகத்தில் இருப்பவராக இருந்தால், அடிக்கடி மாஸ்க்குளை மாற்ற வேண்டும்.