மலையாள சினிமாவில் தற்போதுள்ள இளம் காமெடி நடிகர்களில் கவனிக்கத்தக்க ஒருவர் தான் ஜேக்கப் கிரிகோரி. துல்கர் சல்மான் வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவருடன் இணைந்து சில படங்களில் தொடர்ந்து அவரது நண்பராக நடித்து, ரசிகர்களை ஈர்த்தவர் இந்த ஜேக்கப் கிரிகோரி. அதுமட்டுமல்ல துல்கரின் தந்தை மம்முட்டி நடிக்கும் படங்களிலும் இவருக்கு தவறாது ஒரு கேரக்டர் கிடைத்துவிடுகிறது.
அந்தவகையில் தற்போது மம்முட்டியுடன் ‘உண்ட’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் ஜேக்கப் கிரிகோரி. இதில் மம்முட்டி அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்க, படம் முழுவதும் அவருடன் கூடவே பயணிக்கும் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார் ஜேக்கப். இன்று ஜேக்கப்பின் பிறந்த நாள் என்பதை அறிந்து படக்குழுவினர் அதை தடபுடலாக கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர். நடிகர் மம்முட்டி அவருக்கு பிறந்தநாள் கேக் ஊட்டி இன்றைய நாளை அவருக்கு மிகவும் இனிமையான நாளாக மாற்றிவிட்டார்.