ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தோற்கடிக்கப்பட்டது என்று அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனில் நேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார் அவர்.ஈராக், சிரிய நாடுகளின் சில பகுதிகளைக் கைப்பற்றிய அவற்றைத் தனிநாடு என்று அறிவித்திருந்தது.
ஐ.எஸ்.ஐ.எஸ். (ஈராக், சிரிய இஸ்லாமிக் ஸ்ரேட்) அமைப்பு. அந்த அமைப்பின் பிடியில் இருந்து ஈராக் 2017ஆம் ஆண்டு முழுமையாக விடுவிக்கப்பட்டது.
சிரியாவில் அந்த அமைப்பு தொடர்ந்தும் வேரூன்றியிருந்தது. இதனால் சிரியாவில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வந்தது அமெரிக்கா.
பல்மைரா, டமஸ்கஸ், இட்லிப், அலெப்போ, மேற்கு அலெப்போ என்று ஒவ்வொரு நகராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை மீட்டு வந்தது. இந்த நிலையில் சிரியாவில் இருந்தும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டது என்று நேற்று அறிவித்தார் ட்ரம்ப்.
எனினும், அந்த அமைப்பின் ஆயுததாரிகள் சிலர் ஆங்காங்கே குழுக்களாகச் செயற்பட்டு வருகின்றன. அவர்கள் மிகவும் வலிமையானவர்கள். அவர்கள் மிகமிக விரைவில் வீழ்த்தப்படுவார்கள். இன்னும் ஒரு வாரத்தில் சிரியாவில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். வழித்துத் துடைக்கப்படும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
முன்னதாக ட்ரம்ப் சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறும் முடிவை அறிவித்திருந்தார். இதற்கு பல தரப்புக்களில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன. இந்த நிலையில் தற்போது சிரியாவில் இருந்து ஐ.எஸ். முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.