ஜோதிடம்

தோல்விக்கு காரணமும் கிரகங்களே!

தோல்விக்கு காரணமும் கிரகங்களே!ஒரு மனிதனின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுக்கூடிய தடை, தடங்கல், தோல்விகள் ஏற்படுவதற்கும் கிரக திசா புத்திகள், கோச்சார கிரக நிலைகளே காரணமாக இருக்கின்றன. பலம் குறைந்த நீச்ச கிரக சேர்க்கை பெற்ற ராகு-கேது திசைகளும் தடைகள், தோல்விகளை ஏற்படுத்தும். தடைகள் என அனைவராலும் கருதப்படுவது, தன்னுடைய குழந்தைகளுக்கு எதிர் காலத்தை நிர்ணயக்கூடிய கல்வியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை குறிப்பதாகும்.

கல்வியில் தடை :புதன் நீச்சமாகியோ, 6,8,12ல் மறைந்தோ திசை அமைவதும், மேலும் லக்னம், 5,7,8-ம் இடங்களில் சந்திரன்-சுக்கிரன் சம்பந்தம் ஏற்படும் திசாபுத்திகளால் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்பட்டு கவனம் தடுமாறும்.சுக ஸ்தானத்தின் அதிபதியான 4ஆம் அதிபதியுடன் நீச்ச கிரகத்தின் சேர்க்கை பெற்ற திசாபுத்திகளால் உடல்நலம் பாதிக்கப்பட்டுவதன் கல்வி தடை ஏற்படலாம்.சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை, நீச்ச கிரக திசாபுத்திகள், ராகு-கேதுக்கள் ராசிக்கு 2,4,7,8,10 போன்ற ஸ்தானங்களில் வருவது, சனிப்பெயர்ச்சி காரணமாக 4ல் சனி, ஏழரை சனி, அஷ;டமச்சனி நடப்பது ஆகியவையும் கல்விக்கு பாதிப்பையே ஏற்படுத்துகின்றன.இத்தகைய கிரக நிலைகள் அமையும்போது, மேலும் அதிக சிரமப்பட்டு படிப்பில் முழு கவனம் செலுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.அதிக மறதி :6,8,12 ஆகிய கிரக திசைகள் அமைவது.திடீர் தடைகள் :8ஆம் அதிபதி மற்றும் 4ஆம் அதிபதியுடனும், சனி, செவ்வாயுடனும் சேர்க்கை பெற்று திசை அமைவது.வழிபாடு, பரிகாரங்கள் :ஹயக்ரீவ தலங்கள் சென்று வழிபட்டால் கல்வித் தடைகள் நீங்கும். புதன்கிழமையும், திருவோண நட்சத்திரமும் சேரும் தினத்தில் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி வழிபடலாம். திருக்கடையூர் அபிராமி அம்மனை தரிசித்து பிரார்த்திக்கலாம்.தினமும் காலையில் விநாயகர் அகவல் படித்தால், நினைவாற்றல் அதிகரிக்கும்.ஞானத்தையும், பல்வேறு கலை, கல்விகளில் தேர்ச்சியையும், அறிவாற்றலையும் அருளும் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையன்று வணங்கலாம்.திருவொற்றியூரில் ஞான சக்தியாக அருளும் வடிவுடையம்மனை பவுர்ணமி அன்று தரிசித்து வழிபடலாம். கல்வி, வித்தை அருளும் புதன் பகவானை வணங்கலாம். கல்விக் கடவுளாம் சரஸ்வதியை வணங்குவது நல்ல பலன் தரும்.

Recent posts

இருவிதமான திருமண தோஷங்கள்

திருமணம் பார்க்கும்போது இருவிதமான தோஷங்கள் மக்கள் மத்தியில் நடைமுறையில் உள்ளது. அவைகள்1.செவ்வாய் தோஷம்2.ராகு-கேது தோஷம் செவ்வாய் தோஷம் : செவ்வாய் தோஷம் என்னவென்பதை அறிந்து கொண்டால் அதற்கு...
Thamil Paarvai

திருமணமும், ஜாதகமும்…!!

திருமணம் பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும், அதில் நடைபெறும் சடங்குகள் சம்பிரதாயங்கள் பற்றியும், நாம் இதுவரை விரிவாக பார்த்தோம். இனி திருமணத்தில் மணமக்களின் ஜாதகத்தின் முக்கியத்துவம் யாது...
Thamil Paarvai

நிதானமான செயல்பாடுகளின் மூலம் எண்ணிய இலக்கை அடையும் திறமை கொண்ட மகர ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது மகர ராசி அன்பர்களுக்கு மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், நுட்பமான செயல்பாடுகளின் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய ஒரு சாதகமான வாய்ப்புகளை உருவாக்கும் காலமாக அமையும்....
Thamil Paarvai

சவாலான செயல்களையும் செய்து முடிக்கும் வல்லமை கொண்ட மீன ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது மீன ராசி அன்பர்களுக்கு தோற்றப்பொலிவில் புதிய மாற்றத்தையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும். குடும்ப விவரங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை குறைத்துக் கொள்ளவும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள்...
Thamil Paarvai

கனிவான பேச்சுக்களின் மூலம் அனைவரையும் ஈர்க்கும் வல்லமை கொண்ட கன்னி ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது கன்னி ராசி அன்பர்களுக்கு வித்தியாசமான சிந்தனைகளின் மூலமும், புதுமையான வியூகங்களின் மூலமும் திறமைகளை வெளிப்படுத்தி தங்களுக்கென புதிய அத்தியாயத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வாக்கு...
Thamil Paarvai

பெருந்தன்மையான பேச்சுக்களின் மூலம் அனைவரையும் கவரக்கூடிய கும்ப ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது கும்ப ராசி அன்பர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து சூழ்நிலைக்கேற்ப செயல்படுவதன் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். நெருக்கமானவர்களை...
Thamil Paarvai

எதற்கும் கலங்காத நெஞ்சமும்… எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாத குணமும் கொண்ட கடக ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது கடக ராசி அன்பர்களுக்கு புதுவிதமான அனுபவங்களை உருவாக்கக்கூடிய காலக்கட்டங்களாக அமையும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான தனவரவுகளை பெறுவீர்கள். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்திருந்த சில...
Thamil Paarvai

எப்பொழுதும் குறிக்கோளுடன் செயல்படக்கூடிய விருச்சிக ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது விருச்சிக ராசி அன்பர்களுக்கு எண்ணங்களில் புத்துணர்ச்சியையும், செயல்பாடுகளில் துரிதத்தையும் உருவாக்கும். பேச்சுக்களில் பொறுமையை கையாளுவது நல்லது. சில நேரங்களில் பேச்சுக்களில் அதிகாரத்தன்மை அதிகரிக்கும். பொருளாதாரம்...
Thamil Paarvai

சூழ்நிலைகளை அறிந்து சாதுர்யமாக செயல்படும் மிதுன ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு புதுமையான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்திறனும், புத்திசாலித்தனமும்...
Thamil Paarvai

Leave a Comment