சிறுகதை சிறுவர் பக்கம் பஞ்ச தந்திரம்

நண்டு, கொக்கைக் கொன்ற கதை

ஒரு பெரிய குளம் ஒன்று இருந்தது. அந்த குளத்தின் கரையோரத்தில் கிழக்கொக்கு ஒன்று விசனமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.

துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “நம்மைச் சும்மாவிடாதே, ஆனால் செயலற்று நின்றுள்ளதே என்னவாக இருக்கும்” என்று. “நமக்கேன்” என்று இராமல் அதன்முன் வந்தது. “என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்?” என்றது.

“நான் மீனைக்கொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரி இல்லை” என்றது கொக்கு.

“மனசு சரி இல்லையா… ஏன்?’ என்றது மீன்.

“அதை ஏன் கேட்கிறாய்…” என்று பிகு பண்ணியது கொக்கு.

“பரவாயில்லை சொல்லுங்களேன்”

“சொன்னால் உனக்குத் திக் என்றாகும்.”

மீனுக்குப் பரபரத்தது.

“சொன்னால்தானே தெரியும்”

“வற்புறுத்திக் கேட்பதாலே சொல்கிறேன். இப்போது ஒரு செம்படவன் இங்கே வரப்போறான்…” என்று இழுத்தது கொக்கு.

“வரட்டுமே”

“என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்.”

“அய்யய்யோ!”

உடனே அம்மீன் உள்ளே சென்றுவிட்டது.

சில நிமிடங்கள் ஆகி இருக்கும்; பல மீன்கள் அதன்முன் துள்ளின.

அதுமட்டுமா! ஒட்டுமொத்தமாக “நீயே எங்களையெல்லாம் அந்த அபாயத்திலிருந்து காப்பாற்றேன்” என்று கெஞ்சின. அபாயம் சொன்னவனே உபாயமும் சொல்வான் என்று அவைகள் யோசித்து கொக்கிடம் உதவி கேட்டன.

“நான் என்ன செய்வேன்? என்னால் செம்படவனோடு சண்டை போடா முடியாது. கிழவன் நான். வேண்டுமென்றால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகலாம். அதனால் எனக்கும் இந்தத் தள்ளாத வயதில் பரோபகாரி என்ற பெயரும் வரும்; நீங்களும் பிழைத்திருப்பீர்கள்” என்றது கொக்கு மிகவும் இரக்கம் கசிய.

மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின. “அபாயத்தை அறிந்து சொன்ன நீங்களே உபாயத்தையும் தெரிந்து சொல்கிறீர்கள்; அப்படியே செய்யுங்கள்” என்றன ஒருமித்தக் குரலில்.

கொக்குக்கும் கசக்குமா காரியம்? நடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கவ்விக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலர வைத்தது.

குளத்திலிருந்த நண்டு ஒன்று இதை கவனித்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது. “ஓ சீவகாகுண்யனே! என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுபோங்கள்” என்று கெஞ்சியது.

வருங்காலத்தில் எதுவும் வழிய வரும் – என்று உள்ளுக்குள் துள்ளிக் கொண்ட கொக்கு, நண்டையும் கவ்விக்கொண்டு பறந்தது. பறக்கும் பொது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு.

அதற்க்கு “பக்” கென்றது. அத்துடன் வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் “சட்”டென்று புரிந்துவிட்டது. தன் நிலையும் அப்படித்தானா?

உயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல் அதற்கு மூளை வேலை செய்தது.

“கொக்காரே! நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவைகளையும் காண்பிப்பேன்” என்றது நண்டு.

“அப்படியா? இன்னும் இருக்கிறதா நண்டுகள்?”

“எனக்கு உறவினர்கள் அதிகம்; பல இருக்கின்றன.”

“ஆஹா! அதிர்ஷ்டம் என்றால் இப்படித்தான் வரவேண்டும்; நம்பாடு யோகம்தான்” என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொன்று பழைய குளத்தை நோக்கிப் பறந்தது.

குளத்துக்கு நேராக வரும்போது அதுவரை மண்டுபோலிருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது.

அபாயம் சொன்னவனிடமே உபாயம் கேட்ட மீன்கள் செத்தன. வஞ்சமனத்தானின் உபாயமும் அபாயமே என்றறிந்து கொன்றுவிட்ட நண்டு பிழைத்தது.

Recent posts

வார்த்தைகளை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள்

ஒரு காலத்தில் முதியவர் ஒருவர் தனது அண்டை வீட்டுக்காரரை திருடன் என்று வதந்தியை பரப்பினார். இதன் விளைவாக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். நாட்கள் ஓடின, இளைஞனும்...
Thamil Paarvai

மூன்று வகையான மக்கள்

ஆசிரியர் மாணவர்களிடம் மூன்று பொம்மைகளை காட்டி, அதில் உள்ள வேறுபாடுகளை மாணவ்ரகளை கண்டுபிடிக்கும்படி கேட்டார். மூன்று பொம்மைகளும் ஒரே மாதிரி வடிவம், அளவை கொண்டது. மிகுந்த கவனிப்புக்குப்...
Thamil Paarvai

ஓநாய்.. ஓநாய்..

ஒரு கிராமத்தில், ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருமுறை அவன் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, கிராமவாசிகளுக்கு விளையாட்டு காட்ட நினைத்தான். உடனே “ஓநாய்.....
Thamil Paarvai

முட்டாள்தனமான நாரை

ஒரு நாள் நாரை மிகுந்த பசியுடன் இருந்தது, அதற்கான உணவைத் தேடி கூட்டிலிருந்து வெளியே வந்தது. நாரை, மீன் பிடிக்க ஆற்றங்கரைக்கு சென்று மீனுக்காக காத்துக்கொண்டிருந்தது. நாரை...
Thamil Paarvai

ஆழம் தெரியாமல் காலை விடாதே

ஒரு நரி கிணற்றின் பக்கமாக நடந்து சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக அது கிணற்றினுள் விழுந்தது. அது தன்னால் முடிந்த வரை வெளியே வர முயற்சித்தது, அதனால்...
Thamil Paarvai

தவறு யாருடையது?

எலியும், தவளையும் நண்பர்களாக இருந்தனர். ஒவ்வொரு காலையிலும் தவளை தன் குளத்தில் இருந்து வெளியேறி தனது நண்பனை சந்திக்கச் செல்லும். எலி அதற்கும் நீச்சல் கற்றுக்கொடுக்க தவளையிடம்...
Thamil Paarvai

மூன்றாவது மீனுக்கு என்ன ஆச்சு?

ஒரு கிராமத்தில் உள்ள குளத்தில் மூன்று மீன்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஒரு நாள், அந்த குளத்தின் வழியாக சென்ற சில மீனவர்கள், அங்கே நிறைய...
Thamil Paarvai

மறைக்கப்பட்ட புதையல்

ஒரு விவசாயிக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் சோம்பேறிகளாக இருந்தனர். அவர்களை கடுமையாக உழைக்கும் இளைஞர்களாகப் பார்க்க அந்த விவசாயி விரும்பினார். அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி...
Thamil Paarvai

பேராசை கொள்ளாதீர்கள்

ஒருமுறை ஒரு நாய் மிகவும் பசியாக இருந்தது. அது எல்லா இடங்களிலும் உணவுக்காக அலைந்தது, கடைசியில் ஒரு எலும்பு துண்டை கண்டது. அது தன் வாயில் எலும்பு...
Thamil Paarvai

Leave a Comment