சிறுகதை சிறுவர் பக்கம் பஞ்ச தந்திரம்

காக்கை, பாம்பைக் கொன்ற கதை

ஒரு பெரிய மரம். அதில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு காக்கைகள் கூடு கட்டிக்கொண்டு சந்தோஷமாக இருந்தன.

ஒருநாள் அம்மரத்திலிருந்த பொந்துக்கு ஒரு கருநாகம் வந்து சேர்ந்தது. சேர்ந்ததோடு இல்லாமல் காக்கை இடும் முட்டைகளை எல்லாம் ஒவ்வொரு நாளும் காலி செய்து கொண்டு வந்தது.

ஒருநாளா… இரண்டு நாளா பலநாள்! காக்கைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை . கருநாகத்தை காக்கை என்ன செய்ய முடியும்?

அதற்காக விட்டுவிட முடியுமா? விடலாமா?

ஒரு நரியிடம் ஆலோசனை கேட்டது.

நரி சரியான யோசனை ஒன்றை சொன்னது.

“அந்தபுரத்தில் அரசகுமாரி குளிக்கிற இடத்திற்குப் போ. அவள் குளிக்கும்போது நகைகளை கழட்டி ஒரு பக்கம் வைப்பாள். அந்த ஆபரணங்களில் பெரியதான ஒன்றை எடுத்துக்கொள். பலர் பார்க்கும்படி மெல்லப் பறந்து வந்து அவர்களின் எதிரில் அந்த நகையை பாம்பு இருக்கும் பொந்தில் போட்டு விடு. யாரவது பார்க்கும் படி போட வேண்டும்.

“போட்டால்…?”

“போடு முதலில். அப்புறம் பார்”. என்றது.

காக்கை தாமதிக்கவில்லை. பறந்து அந்தபுரத்திற்கு சென்று பார்த்தது அரசகுமாரியின் நகைகளை. ஒரு முத்துமாலை அதன் கண்ணை உறுத்தியது. அதையே கொத்தி எடுத்தது. அங்கு இருந்த அரசகுமாரியின் சேவகிகள் – ‘ஆ’ காகம் முத்துமாலையைக் கொத்திக் கொண்டுப் போகுது’ என்று கத்தினர். உடனே சேவகர்கள் ஓடி வந்தார்கள்.

காக்கை மெதுவாக – அவர்களின் கண்ணில் படும்படி பறந்து வந்தது. அவர்கள் அருகில் வந்ததும் அவர்கள் பார்க்கும் படி அந்த முத்துமாலையை பாம்பு இருக்கும் பொந்தில் போட்டது.

உடனே சேவகர்கள் தம் கையில் இருந்த ஈட்டிகளால் அந்தப் பொந்தைக் குத்திக் கிளறினார்கள். உடனே உள்ளே இருந்த பாம்பு சீறி கொண்டு வெளியே வந்தது. பாம்பை பார்த்த சேவகர்கள் உடனே அதை கொன்றார்கள்.

‘அப்புறம் பார்’ என்று நரியார் சொன்னதின் அர்த்தம் காக்கைக்குப் புரிந்தது. சேவகர்களும் முத்துமாலையை எடுத்து சென்றனர்.

சரியான யோசனையால் நிறைவான பலனை அடைந்த காக்கைத் தம்பதிகள் நிம்மதிப் பெருமூச்சி விட்டன.

Recent posts

17 ஒட்டகங்களும் 3 மகன்களும்: முன்பொரு காலத்தில், பாலைவனத்திற்கு அருகிலுள்ள ஒரு தனிமையான கிராமத்தில் ஒரு முதியவர் தனது மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். அவரிடம் 17...
Thamil Paarvai

ஒரு வணிகரும் அவரது கழுதையும்:

வசந்த காலத்தின் ஒரு அழகான காலைப் பொழுதில், ஒரு வணிகர் உப்பை விற்பதற்காகச் சந்தைக்குக் கொண்டு செல்லத் தனது கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றினார். வணிகரும்...
Thamil Paarvai

அறிவற்ற குரங்குகள்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மிகப் பெரிய, அடர்ந்த மற்றும் இருண்ட காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டிற்கு ஒரு குரங்கு கூட்டம் வந்தது. அது குளிர்காலமாக இருந்ததால்,...
Thamil Paarvai

மகிழ்ச்சியின் ரகசியம்

முன்னொரு காலத்தில், சாமுவேல், திமோதி மற்றும் ஜாண்டர் ஆகிய மூன்று சகோதரர்கள் காட்டிற்கு அருகில் இருந்த ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தனர். அவர்கள் நேர்மையானவர்களாகவும் கடின...
Thamil Paarvai

மிகவும் அழகான இதயம்

ஒரு நாள், மக்கள் கூட்டம் நிறைந்த ஓர் இடத்தில், ஒரு இளைஞன் சத்தமாகப் பேசத் தொடங்கினான். “மக்களே, என்னைப் பாருங்கள். உலகிலேயே மிக அழகான இதயம் என்னிடம்தான்...
Thamil Paarvai

உலகை அல்ல, உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

முற்காலத்தில், ஒரு மன்னரின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். செல்வம் செழித்திருக்க, எவ்விதத் துன்பமும் இன்றி மக்கள் வளமான வாழ்க்கையை வாழ்ந்ததால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக...
Thamil Paarvai

உதவாத நண்பர்கள்:

காட்டில் ஒரு முயல் வசித்து வந்தது. அதற்குப் பல நண்பர்கள் இருந்தனர்; தன் நண்பர்களைக் குறித்து அது பெருமை கொண்டிருந்தது. ஒரு நாள், காட்டு நாய்கள் சத்தமாக...
Thamil Paarvai

வலிமையானதா அல்லது பலவீனமானதா?

காட்டில் ஒரு செருக்குமிக்க தேக்கு மரம் இருந்தது. அது உயரமாகவும் வலிமையாகவும் இருந்தது. அந்த மரத்திற்கு அருகில் ஒரு சிறிய செடி வளர்ந்து வந்தது. தேக்கு மரம்,...
Thamil Paarvai

பேராசை பிடித்த சிறுவன்:

சாம் மற்றும் டாம் இருவரும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரட்டையர்கள். அவர்கள் பார்ப்பதற்கு எவ்வளவு ஒரே மாதிரியாக இருந்தார்கள் என்றால், அவர்களின் ஆரம்பக்கால நாட்களில் அவர்களது...
Thamil Paarvai

Leave a Comment