நடிகை நயன்தாராவுக்கு இந்த ஆண்டு துவக்கமே வெற்றிகரமாக அமைந்துள்ளது. நடிகர் அஜித்துடன் அவர் நடித்து வெளியான ‘விஸ்வாசம்’ படம், பெரும் வெற்றி பெற்றதால், மகிழ்ச்சியில் இருக்கிறார் அவர்.
இந்நிலையில், அடுத்ததாக அவர் நடித்து வரும் மார்ச்சில் ரிலீசாக இருக்கும் புதிய படம் ‘ஐரா’. இதில், நடிகை நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தை இயக்கிய சர்ஜுன், ‘ஐரா’ படத்தை இயக்கி இருக்கிறார்.
படபிடிப்பு முடிந்து, ‘ஐரா’ படம் தணிக்கை சான்றுக்காக, தணிக்கை துறைக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள், படத்துக்கு ‘யுஏ’ சான்றிதழ் வழங்கி உள்ளனர். இதையடுத்து, படத்துக்கான புரமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது படக் குழு.