ஆரோக்கியம் குழந்தை பராமரிப்பு

நல்லவர்களாக குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

இந்த உலகமே தன் பிள்ளையைப் புகழ வேண்டும் என விரும்பும் பெற்றோர்கள் அவர்களை தட்டிக் கொடுத்து வளர்த்து அதை சாதிப்பதில்லை. கொட்டிக் கொட்டியே வளர்க்கிறார்கள் என்கிறது மன இயல் ஆய்வுகள். இந்த ஆய்வுகள் ஒவ்வொரு வீட்டிலும் தவிர்க்க முடியாத பிரச்னையாக இருப்பது பெற்றோருக்கும் பிள்ளைக்குமான கருத்து வேறுபாடும், பெற்றோரின் கண்டிப்பும் தான் எனக் கூறுகிறது.

அதீத குறை கூறி வளர்க்கப்படும் பிள்ளைகள் தன்னம்பிக்கை குறைவானவர்களாகவும், தைரியமற்றவர்களாகவும் வளர்வதோடு, மனஅழுத்ததிற்கும் ஆளாகிறார்கள். குறைகளையே கேட்டு கேட்டு வளரும் அவர்கள் பாஸிட்டிவான சிந்தனைகள் இல்லாமல் நெகட்டிவான சிந்தனை மிக்கவர்களாகவும், தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் குறை காணக் கூடியவர்களாகவும் வளர்கிறார்கள் என்று அதிர்ச்சி தகவல் தருகிறது.

பிரெஞ்ச் நாட்டின் புகழ் பெற்ற கட்டுரையாளரான “ஜோசப் யுபர்ட்” குழந்தைகளுக்கு குறை சொல்லிக் கொண்டே இருக்கும் விமர்சகர்கள் தேவையில்லை, அவர்களுக்கு நல்ல முன் மாதிரியே தேவை என நச்சென்று முன் வைக்கிறார். நம் பிள்ளைகளை நாம் குறை சொல்லாவிட்டல் பின் எப்படி திருந்துவார்கள்? இது ஒவ்வொரு பெற்றோரின் அசைக்க முடியாத நம்பிக்கை.உண்மையில் ஒரு மாற்றுக் குறையில்லா பிள்ளையை நான் உருவாக்கி இருக்கிறேன் என்று இந்த உலகிற்கு மார் தட்டிச் சொல்ல வேண்டும் என்று நாம் நினைப்பது தவறில்லை தான்.

ஆனால் அதனால் நம்மையுமறியாமல் என்ன செய்கிறோம். அவர்களிடம் இருக்கும் நிறைகளையெல்லாம் நாம் மிக இயல்பாக எடுத்துக் கொள்கிறோம். அதைப் பற்றி சிறிதளவு கூட அவர்களிடம் சிலாகித்துப் பேசுவதில்லை. ஆனால் இதுவே குறைகளைக் கண்களில் விளக்கெண்ணையை விட்டுக்கொண்டு துருவித் துருவி பார்த்து சரி செய்ய வேண்டும் என்று முனைகிறோம்.

இதில் அந்தக் குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறோம்? உன்னிடம் குறையே இருக்கக் கூடாது என்று மட்டுமா சொல்லித் தருகிறோம். நீயும் இப்படித் தான் மற்றவரிடம் என்ன குறை இருக்கிறது என்று உற்றுப் பார்த்து சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைத் தானே அந்த பிஞ்சு மனதில் விதைக்கிறோம்.

ஏனென்றால் ஒரு குழந்தை பிறந்து ஏழு வயது வரை தன்னைச் சுற்றி நடப்பவற்றிலிருந்தே எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது. நல்லதும் அல்லதும் நம்மிடம் இருந்து தான் அவர்களுக்கு தொடர்கிறது.வாழ்வியல் பட்டறை ஒன்றில், எப்போது பார்த்தாலும் என் கணவர் என்னிடம் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார் என்று அங்கலாய்த்த பெண்ணிடம் அந்த பயிற்சியாளர் கேட்டார், ‘உங்கள் பையன் எப்படி இருக்கிறான் நன்றாகப் படிக்கிறானா?’

நாம் கணவரைப் பற்றி பேசினால் இவர் அதற்கு பதில் சொல்லாமல் நம் பையனைப் பற்றி கேட்கிறாரே என்று சம்பந்தமில்லாத அவர் கேள்வியால் கொஞ்சம் எரிச்சலடைந்த அந்தப் பெண், “படிப்பு பரவாயில்லை நல்ல மார்க் தான் வாங்குகிறான். ஆனால் பொறுப்பு என்பது கொஞ்சம் கூட இல்லை. எதையும் எடுத்த இடத்தில் வைப்பதில்லை. அவன் தம்பியிடம் எதற்கெடுத்தாலும் சண்டை, அப்படி, இப்படி என குறைகளை ஒரு ஆதங்கத்தோடு அடுக்கிக் கொண்டே போகத் தொடங்கினார். அவர் முடிப்பதற்காகக் காத்திருந்த பயிற்சியாளரும், அது முடிவதாகத் தெரியவில்லை என்பதால் வேறு வழியில்லாமல் அவர் குறைகளினூடே இடை மறிக்கிறார்.

இதையெல்லாம் நீங்கள் என்னிடம் தான் சொல்கிறீர்களா இல்லை உங்கள் பிள்ளையிடமும் சொல்லி இருக்கிறிர்களா? என்ன கேட்கிறீர்கள் அவனிடம் சொல்லாமலா ஒவ்வொரு முறையும் அவன் குறைகளை சுட்டிக் காட்டுவதிலே தான் என் பொழுதே போகிறது.
“ஏன்?” இது பயிற்சியாளர்.

சொன்னால் தானே தெரியும் .அப்போது தானே திருந்துவான். அவன் அவனைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தான் சொல்கிறேன். ஆனால் எங்கே திருத்திக் கொள்கிறான், கோபம் தான் படுகிறான். நாம் ஏதோ அவனிடம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று எரிச்சல் தான் வருகிறது அவனுக்கு என்றார். சற்று முன் தன் கணவர் தன்னிடம் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார் என்று எரிச்சல் பட்ட அந்தப் பெண்.

இது தான் நிதர்சனம். நாம் குறை சொல்லும்போது நாம் அவர்கள் அக்கறை எடுத்து திருத்துகிறோம் என்று பலமாக நம்புகிறோம். ஆனால் இதுவே நம்மை யாராவது குறை சொன்னால,” ஏன் இப்படி இருக்கிறாரகள்?! எப்போது இவர்கள் திருந்துவார்கள் என்று பலவீனமாகித் துடிக்கிறோம்.
படிப்பில் ஒரு குழந்தை கொஞ்சம் மார்க் குறைத்து வாங்கி விட்டால் போதும், அது என்ன செய்தாலும் குற்றம். எது கேட்டாலும் சாடைப் பேச்சு. அது சற்று நேரம் டி.வி பார்த்தால் கூட, “இப்போது என்ன டி.வி. கேட்கிறது முதலில் மார்க் அதிகம் வாங்கப் பார்” என்கிறோம்.

அந்தக் குழந்தை சட்டை வாங்கிக் கேட்டாலும், ஸ்வீட் வாங்கிக் கேட்டாலும் வாங்கிக் கொடுப்பதில் நாம் தவறுவதில்லை. ஆனால் நம் செயலின் முடிவு அவர்கள் தவறு களை சுட்டிக் காட்டுவதிலும் அதை அவர்கள் மறந்துவிடக் கூடாது என்பதிலும் தான் முடிகிறது.

Recent posts

உணவுக்கு முன்னும், பின்னும் தண்ணீர் குடிப்பது.. நல்லதா?.. கெட்டதா?..

தண்ணீர் குடித்தல்:உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிக இன்றியமையாதது. இதனால்தான் தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர்.ஆனால் உணவு உண்பதற்கு முன்பு...
Thamil Paarvai

ரம்புட்டான் பழத்தில் இத்தனை நன்மைகள் இருக்கா?

👉 பொதுவாகவே நாம் சாப்பிடும் உணவுகளாக இருந்தாலும் சரி பழமாக இருந்தாலும் சரி அனைவரும் சத்துகள் நிறைந்துள்ள பழத்தை தான் அதிகமாக எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். அதில் ஒன்று...
Thamil Paarvai

இரவு நேரங்களில் மரத்தின் அடியில் தூங்கக்கூடாது ஏன்?

😴 இரவு நேரங்களில் நாம் நல்ல உறக்கத்தை மேற்கொள்வது மிகவும் அவசியம். அதாவது 8 மணிநேரம் உறக்கம், கட்டாயம் தேவையான ஒன்றாகும். பெரும்பாலானோர் பகல் நேரத்தில் மரத்தின்...
Thamil Paarvai

ஆரோக்கியமான இதயம் வேண்டுமா, வெண்டிக்காய் சாப்பிடுங்கள்:

வெண்டிக்காய் என்பது ஒரு வகை பச்சை காய்கறி. இது நீண்ட விரல் போன்றது என்பதால் ஆங்கிலத்தில் லேடீஸ் ஃபிங்கர் என்று அழைக்கப்படுகிறது.  இலங்கையில் இது பொதுவாக வெண்டிக்காய்...
Thamil Paarvai

தூய்மையான சமையலறையை பெறுவதற்கான வழிகள்

சுத்தமான சமையல் அறையில் சமைக்க வேண்டும் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். எனவே நீங்கள் சுத்தமான சமையல் அறையைப் பெற உங்களுக்காக சில குறிப்புகள். 👉 சமையலறையை சுத்தமாக...
Thamil Paarvai

அவல் பால் கொழுக்கட்டை

அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்கலாம். இப்போது அவல் பால் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்:- அவல்...
Thamil Paarvai

சைக்கிள் ஓட்டுவதின் நன்மைகள்

மனிதனுடைய பரிணாம வளர்ச்சியில் தசைகளின் பங்கு முக்கியமானது. உடலின் எலும்புகளோடு தசைகளும், திசுக்களும் பின்னிப் பிணைந்து உருவத்தையும், தொழிலையும் செய்கிறது. தசைகளுக்குப் போதுமான வேலைகள் இருக்கும் போது...
Thamil Paarvai

இந்த கவலை இனி உங்களுக்கு வேண்டாம் !!

இன்று பலரும் முகத்தை எப்பொழுதும் அழகாக வைத்துக்கொள்வதற்காக பலவகை அழகுச்சாதனப் பொருட்களை தேடி வாங்குகிறார்கள். இறுதியில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகிறார்கள். 👧 செயற்கையான அழகுச்சாதனப்...
Thamil Paarvai

பற்களில் உள்ள கறையைப் போக்க சிறந்த வழிமுறைகள் !!

பொதுவாக சிலர் அழகாக இருப்பார்கள், ஆனால் அவர்களுடைய பற்களில் கறை படிந்து இருந்தால் மற்றவர்களுடன் பேசுவதற்கு தயங்குவார்கள். பிறரிடம் சாதாரணமாகப் பேசுவதைக் கூட தவிர்த்து தனிமையாக இருப்பார்கள்....
Thamil Paarvai

Leave a Comment