நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டல வியல் திணைக் களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, வட-மத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களுக்கு. 50 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது.
சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மாகாணத்தில் கடற்கரை பகுதியில் காலையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிர தேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக் கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப் புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.