ஜோதிடம்

நிதானமான செயல்பாடுகளின் மூலம் எண்ணிய இலக்கை அடையும் திறமை கொண்ட மகர ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது மகர ராசி அன்பர்களுக்கு மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், நுட்பமான செயல்பாடுகளின் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய ஒரு சாதகமான வாய்ப்புகளை உருவாக்கும் காலமாக அமையும். புதிய முயற்சிகளில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்பட்டாலும், விடாமுயற்சியுடன் செயல்படுவதன் மூலம் எதிர்பார்த்த முடிவினையும் பெற இயலும்.

பொருளாதாரம் :

பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவதன் மூலம் சேமிப்புகளை மேம்படுத்த இயலும். சில நேரங்களில் வரவுக்கேற்ற செலவுகளும் சமமாக இருக்கும்.

பெண்களுக்கு :

பெண்களுக்கு எதிர்பாராத சில செலவுகளின் மூலம் தனவரவில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் இன்னல்கள் குறையும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் புதுவிதமான சூழல் உண்டாகும்.

மாணவர்களுக்கு :

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடற்பயிற்சி சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று எண்ணிய இலக்கை அடைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோக பணிகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வாகனம் தொடர்பான பழுதுகள் அவ்வப்போது ஏற்பட்டு விரயங்கள் உண்டாகும். இன்பச் சுற்றுலா தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.

வியாபாரிகளுக்கு :

வியாபார பணிகளில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். வாடிக்கையாளர்களிடம் தேவையற்ற வாதங்களையும், கருத்துக்களையும் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படுதல் நன்மையை ஏற்படுத்தும். வேகத்தை விட விவேகம் பலவிதங்களில் உங்களுக்கு முன்னேற்றத்தை உருவாக்கும்.

கலைஞர்களுக்கு :

கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் நுணுக்கமான சில விஷயங்களை ஆராய்ந்து வெளிப்படுத்துவீர்கள். செய்கின்ற புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.

நன்மைகள் :

புதிய வேலை தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் விலகி உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் அறிமுகத்தால் மேன்மையை ஏற்படுத்தக்கூடிய காலக்கட்டமாக இந்த புத்தாண்டு அமையும்.

கவனம் :

புதிய முயற்சிகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று, நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பதும், தொழில் சார்ந்த துறையில் அனுசரித்து செல்வதில் கவனமும் வேண்டும்.

வழிபாடு :

திங்கட்கிழமைதோறும் துர்க்கை அம்மனை வழிபாடு செய்துவர எண்ணங்களில் இருந்துவந்த பலவிதமான குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

Recent posts

தோல்விக்கு காரணமும் கிரகங்களே!

தோல்விக்கு காரணமும் கிரகங்களே!ஒரு மனிதனின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுக்கூடிய தடை, தடங்கல், தோல்விகள் ஏற்படுவதற்கும் கிரக திசா புத்திகள், கோச்சார கிரக நிலைகளே காரணமாக இருக்கின்றன. பலம்...
Thamil Paarvai

இருவிதமான திருமண தோஷங்கள்

திருமணம் பார்க்கும்போது இருவிதமான தோஷங்கள் மக்கள் மத்தியில் நடைமுறையில் உள்ளது. அவைகள்1.செவ்வாய் தோஷம்2.ராகு-கேது தோஷம் செவ்வாய் தோஷம் : செவ்வாய் தோஷம் என்னவென்பதை அறிந்து கொண்டால் அதற்கு...
Thamil Paarvai

திருமணமும், ஜாதகமும்…!!

திருமணம் பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும், அதில் நடைபெறும் சடங்குகள் சம்பிரதாயங்கள் பற்றியும், நாம் இதுவரை விரிவாக பார்த்தோம். இனி திருமணத்தில் மணமக்களின் ஜாதகத்தின் முக்கியத்துவம் யாது...
Thamil Paarvai

சவாலான செயல்களையும் செய்து முடிக்கும் வல்லமை கொண்ட மீன ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது மீன ராசி அன்பர்களுக்கு தோற்றப்பொலிவில் புதிய மாற்றத்தையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும். குடும்ப விவரங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை குறைத்துக் கொள்ளவும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள்...
Thamil Paarvai

கனிவான பேச்சுக்களின் மூலம் அனைவரையும் ஈர்க்கும் வல்லமை கொண்ட கன்னி ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது கன்னி ராசி அன்பர்களுக்கு வித்தியாசமான சிந்தனைகளின் மூலமும், புதுமையான வியூகங்களின் மூலமும் திறமைகளை வெளிப்படுத்தி தங்களுக்கென புதிய அத்தியாயத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வாக்கு...
Thamil Paarvai

பெருந்தன்மையான பேச்சுக்களின் மூலம் அனைவரையும் கவரக்கூடிய கும்ப ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது கும்ப ராசி அன்பர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து சூழ்நிலைக்கேற்ப செயல்படுவதன் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். நெருக்கமானவர்களை...
Thamil Paarvai

எதற்கும் கலங்காத நெஞ்சமும்… எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாத குணமும் கொண்ட கடக ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது கடக ராசி அன்பர்களுக்கு புதுவிதமான அனுபவங்களை உருவாக்கக்கூடிய காலக்கட்டங்களாக அமையும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான தனவரவுகளை பெறுவீர்கள். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்திருந்த சில...
Thamil Paarvai

எப்பொழுதும் குறிக்கோளுடன் செயல்படக்கூடிய விருச்சிக ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது விருச்சிக ராசி அன்பர்களுக்கு எண்ணங்களில் புத்துணர்ச்சியையும், செயல்பாடுகளில் துரிதத்தையும் உருவாக்கும். பேச்சுக்களில் பொறுமையை கையாளுவது நல்லது. சில நேரங்களில் பேச்சுக்களில் அதிகாரத்தன்மை அதிகரிக்கும். பொருளாதாரம்...
Thamil Paarvai

சூழ்நிலைகளை அறிந்து சாதுர்யமாக செயல்படும் மிதுன ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு புதுமையான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்திறனும், புத்திசாலித்தனமும்...
Thamil Paarvai

Leave a Comment