ஆரோக்கியம் இயற்கை அழகு பொது மருத்துவம்

பற்களில் உள்ள கறையைப் போக்க சிறந்த வழிமுறைகள்.

பொதுவாக சிலர் அழகாக இருப்பார்கள், ஆனால் அவர்களுடைய பற்களில் கறை படிந்து இருந்தால் மற்றவர்களுடன் பேசுவதற்கு தயங்குவார்கள். பிறரிடம் சாதாரணமாகப் பேசுவதைக் கூட தவிர்த்து தனிமையாக இருப்பார்கள். இப்பொழுது அவர்களுக்கு பற்களில் உள்ள கறையைப் போக்குவதற்கான சில வழிமுறைகள் பற்றிப் பார்ப்போம்.

😃 ஒரு கைப்பிடியளவு ஸ்ட்ராபெர்ரியை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் காலையில் பல் துலக்கியவுடன், அரைத்து வைத்த ஸ்ட்ராபெர்ரியில் சிறிதளவு எடுத்து லேசாக தேய்த்து வாய் கொப்பளியுங்கள். இவ்வாறு 10 நாட்களுக்கு செய்தால் பற்களில் உள்ள கறையை எளிதாக நீக்கலாம்.

😃 இரவு படுப்பதற்கு முன் ஆரஞ்சு பழத்தோலைக் கொண்டு பற்களை நன்றாக தேய்க்க வேண்டும். இதனை தேய்த்தப்பிறகு வேறு எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. மறுநாள் காலை எழுந்து வாயை கொப்பளிக்கலாம். இரவு முழுவதும் பற்களில் படர்ந்திருப்பதால் ஆரஞ்சு பழத்தோல் கறையை போக்குவதுடன் கிருமிகளையும் அழித்து, பற்களுக்கு பாதுகாப்பளிக்கிறது.

😃 தினந்தோறும் 1 சொட்டு ரோஸ்மெரி ஆயிலை ஒரு டேபிள் ஸ்பு+ன் நீரில் கலந்து வாயை கொப்பளித்துப் பின்னர் பல் துலக்குவதன் மூலம் கறைபடிந்த பற்களை சுத்தமான பற்களாக மாற்றலாம்.

😃 தினந்தோறும் பற்களை கற்றாழை ஜெல் கொண்டு தேய்ப்பதன் மூலமும் பற்களில் உள்ள கறையைப் போக்கலாம். மேலும் கற்றாழையானது வாய் துர்நாற்றத்தைப் போக்க கூடியது.

😃 1 டீஸ்பு+ன் கிராம்பு பொடியுடன், 1 டீஸ்பு+ன் ஆலிவ் ஆயில் கலந்து, கறைபடிந்த பற்களில் தேய்த்து, சிறிது நேரத்திற்குப் பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிப்பதன் மூலமும் சுத்தமான பற்களைப் பெறலாம்.

😃 சீஸ் சாப்பிடுவதால் எச்சிலில் அல்கலைன் அளவு அதிகரித்து பற்களில் கறை படிவது தடுக்கப்படும். மேலும் இவை, பற்களின் மேலே ஓர் படலத்தை உண்டாக்கி பற்களில் கறை படிவதை தடுக்கும். இதனால் உணவு உட்கொண்ட பிறகு சிறிதளவு சீஸ் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளுங்கள்.

😃 பற்களை சுத்தமாக்குவதிலும், ஈறுகளுக்கு ஆரோக்கியம் அளிப்பதிலும் ஆப்பிளின் பங்கு சிறந்தது. எனவே உணவை சாப்பிட்டு முடித்த ஒரு மணி நேரம் கழித்து ஆப்பிள் ஒரு துண்டு எடுத்து சாப்பிடுங்கள். இதனை தொடர்ந்து செய்வதன் மூலம் பற்களில் கறை படிவதைத் தடுக்கலாம்.

😃 பற்களில் உள்ள கறையைப் போக்க கொய்யாப் பழம் மற்றும் கொய்யா இலைகள் மிகச்சிறந்தது. கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரைக் கொண்டு வாயை கொப்பளித்து வந்தாலும் அல்லது தினந்தோறும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடுவதன் மூலமும் பற்களில் உள்ள கறையைப் போக்க முடியும்.

Recent posts

உணவுக்கு முன்னும், பின்னும் தண்ணீர் குடிப்பது.. நல்லதா?.. கெட்டதா?..

தண்ணீர் குடித்தல்:உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிக இன்றியமையாதது. இதனால்தான் தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர்.ஆனால் உணவு உண்பதற்கு முன்பு...
Thamil Paarvai

ரம்புட்டான் பழத்தில் இத்தனை நன்மைகள் இருக்கா?

👉 பொதுவாகவே நாம் சாப்பிடும் உணவுகளாக இருந்தாலும் சரி பழமாக இருந்தாலும் சரி அனைவரும் சத்துகள் நிறைந்துள்ள பழத்தை தான் அதிகமாக எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். அதில் ஒன்று...
Thamil Paarvai

இரவு நேரங்களில் மரத்தின் அடியில் தூங்கக்கூடாது ஏன்?

😴 இரவு நேரங்களில் நாம் நல்ல உறக்கத்தை மேற்கொள்வது மிகவும் அவசியம். அதாவது 8 மணிநேரம் உறக்கம், கட்டாயம் தேவையான ஒன்றாகும். பெரும்பாலானோர் பகல் நேரத்தில் மரத்தின்...
Thamil Paarvai

ஆரோக்கியமான இதயம் வேண்டுமா, வெண்டிக்காய் சாப்பிடுங்கள்:

வெண்டிக்காய் என்பது ஒரு வகை பச்சை காய்கறி. இது நீண்ட விரல் போன்றது என்பதால் ஆங்கிலத்தில் லேடீஸ் ஃபிங்கர் என்று அழைக்கப்படுகிறது.  இலங்கையில் இது பொதுவாக வெண்டிக்காய்...
Thamil Paarvai

தூய்மையான சமையலறையை பெறுவதற்கான வழிகள்

சுத்தமான சமையல் அறையில் சமைக்க வேண்டும் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். எனவே நீங்கள் சுத்தமான சமையல் அறையைப் பெற உங்களுக்காக சில குறிப்புகள். 👉 சமையலறையை சுத்தமாக...
Thamil Paarvai

அவல் பால் கொழுக்கட்டை

அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்கலாம். இப்போது அவல் பால் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்:- அவல்...
Thamil Paarvai

சைக்கிள் ஓட்டுவதின் நன்மைகள்

மனிதனுடைய பரிணாம வளர்ச்சியில் தசைகளின் பங்கு முக்கியமானது. உடலின் எலும்புகளோடு தசைகளும், திசுக்களும் பின்னிப் பிணைந்து உருவத்தையும், தொழிலையும் செய்கிறது. தசைகளுக்குப் போதுமான வேலைகள் இருக்கும் போது...
Thamil Paarvai

இந்த கவலை இனி உங்களுக்கு வேண்டாம் !!

இன்று பலரும் முகத்தை எப்பொழுதும் அழகாக வைத்துக்கொள்வதற்காக பலவகை அழகுச்சாதனப் பொருட்களை தேடி வாங்குகிறார்கள். இறுதியில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகிறார்கள். 👧 செயற்கையான அழகுச்சாதனப்...
Thamil Paarvai

பற்களில் உள்ள கறையைப் போக்க சிறந்த வழிமுறைகள் !!

பொதுவாக சிலர் அழகாக இருப்பார்கள், ஆனால் அவர்களுடைய பற்களில் கறை படிந்து இருந்தால் மற்றவர்களுடன் பேசுவதற்கு தயங்குவார்கள். பிறரிடம் சாதாரணமாகப் பேசுவதைக் கூட தவிர்த்து தனிமையாக இருப்பார்கள்....
Thamil Paarvai

Leave a Comment