‘யூனிசெப்’ எனப்படும், ஐ.நா., குழந்தைகள் நிதியத்தின் சர்வதேச நல்லெண்ண துாதர் பதவியிலிருந்து, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை நீக்கும்படி, பாகிஸ்தான், போர்க்கொடி தூக்கியுள்ளது.
பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் பிரபலமான நடிகை பிரியங்கா சோப்ராஇ 36. இவர், தமிழிலும், விஜய் ஜோடியாக, தமிழன் என்ற படத்தில் நடித்துள்ளார். இவர், 2016 முதல், யூனிசெப் நல்லெண்ண துாதராக செயல்பட்டு வருகிறார்.பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை, இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்ததை பாராட்டி, பிரியங்கா சோப்ரா, சமூக வலைதளத்தில், ‘ஜெய்ஹிந்த்; இந்திய ராணுவத்துக்கு வாழ்த்துக்கள்’ என, பதிவிட்டிருந்தார்; இது, பாகிஸ்தான் தரப்புக்கு, பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, பாக்., தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர்இ பெரும் அழிவை ஏற்படுத்தும். நல்லெண்ண துாதர் என்ற முறையில், இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து, அமைதி ஏற்படுத்த, பிரியங்கா முயற்சித்திருக்க வேண்டும். ஆனால்,இந்திய ராணுவத்தை ஆதரித்து கருத்து தெரிவித்த அவர், நல்லெண்ண துாதராக செயல்படும் தகுதியை இழந்துவிட்டார். அதனால், அவரை அந்த பதவியிலிருந்து நீக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.