பியார் பிரேமா காதல் படத்திற்கு பிறகு ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்து வெளியான படம் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய இந்த படத்தில் ஷில்பா மஞ்சுநாத் நாயகியாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் இடம்பெற்ற, கண்ணம்மா என்ற பாடலை சாம்.சிஎஸ் இசையில், அனிருத் பாடியிருந்தார். படம் வெளியாவதற்கு முன்னரே ஓரளவுக்கு பேசப்பட்ட இந்தபாடலின் வீடியோவை தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இளவட்ட ரசிகர்களை இப்பாடல் கவர்ந்து வருகிறது.