இணைய பாஸ்வேர்டுகள் ஹேக் செய்யப்படுகிறதா என்பதை அறியும் பாஸ்வேர்ட் செக்அப் எக்ஸ்டென்ஷன் (Password Checkup extension) என்ற புதிய தொழில்நுட்பத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இணையத்தில் வங்கிக்கணக்கு, இ-மெயில், சமூக வலைத்தள பாஸ்வேர்டுகள் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் திருடப்படுவது தொடர் கதையாகி வருகிறது. போலியான இணையதளங்களில் ஆன்லைன் வர்த்தகம் செய்ய முயற்சிக்கும் போது, வங்கிக் கணக்குகளின் பாஸ்வேர்டுகள் அதிகம் திருடப்பட்டு பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிவதுடன் மற்றும் பணமும் கொள்ளையடிக்கப்படுகிறது.
இந்நிலையில், இணையதளங்களை பயன்படுத்தும் போது பயனாளர்களின் பாஸ்வேர்டு ஹேக் செய்யப்பட்டால், அதை உடனடியாக பயனர்களிடம் தெரிவிக்கும் பாஸ்வேர்ட் செக்அப் எக்ஸ்டென்ஷன் (Password Checkup extension) ஒன்றை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.கூகுள் க்ரோம் பயன்படுத்தும் பயனாளர்கள் இந்த சாஃப்ட்வேர்-ஐ க்ரோம் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யது கொள்ள வேண்டும். இணையதளத்தில் பயனர்கள் பாஸ்வேர்டை டைப் செய்யும்போது அது ஹேக் செய்யப்பட்டால், உடனடியாக இந்த சாஃப்ட்வேர் எச்சரிக்கை நோட்டிபிகேஷனை பயனர்களுக்கு அனுப்பும். இதன்மூலம் பயனர்கள் சுதாரித்துக்கொள்ளலாம் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.