சிறுகதை மொழி இலக்கியம்

பெண் என்பவள்…

ரமா என்பவள் மிகவும் திறமை வாய்ந்தவள். தான் வேலை செய்யும் இடத்தில் வேலை செய்த நேரம் போக கவிதைகள் எழுதி வருவாள். கவிதை போட்டிகளுக்கு கவிதை அனுப்புவாள். புலனக் குழுக்களில் உள்ள போட்டிகளுக்கு கவிதைகள் அனுப்புவாள் முதல் பரிசை வென்று விடுவாள். ஆனால் அவள் வேலை பார்க்கும் இடத்தில் உள்ள மற்றொரு பெண் ஊழியர் ரமாவின் திறமையைப் பார்த்து பொறாமைபட்டாள். எஜமானியிடம் இவள் சரியாக வேலை செய்யவில்லை, இவளுடைய வேலையை நான் தான் செய்து கொண்டிருக்கிறேன். இவள் கவிதை எழுதிக் கொண்டு பொழுதை போக்கிக் கொண்டிருக்கிறாள். இவளுக்கு சம்பளத்தை குறைத்துக் கொடுங்கள் என்று சொல்லிவிட்டாள். ரமா பயந்து கொண்டே எஜமானி அம்மாவை பார்க்க செல்கின்றாள். எஜமானி அம்மா எடுத்த எடுப்பிலேயே என்ன நீ முதலாளி அம்மா மாதிரி நடந்துக்கிற, நான் வேலைக்கார அம்மாவா ? நீ முதலாளியா? என்ன சமாச்சாரம்? என்று அதட்டுகிறார் எஜமானி அம்மாள். நடுநடுங்கி விடுகிறாள் ரமா. நம்ம இந்தியாவை விட்டு இங்கு வேலைக்கு வந்து இருக்கின்றோம். நம்ம இந்திய பெண்மணி தான் இந்த அம்மாவும். நமக்கு மதிப்பு கொடுப்பதில்லை என்ன செய்யலாம். நாடு விட்டு நாடு நம்ப வந்திருக்கிறோம். இது பெண்ணா? பெண்ணுக்கு பெண்ணே எதிராளியா? பொல்லாத உலகம் அப்பா!…… என்று மனதுக்குள் முணுமுணுத்தாள் ரமா. என்ன உங்க நாட்டுக்கு அனுப்பிச்சுடட்டுமா? நீங்களும் அங்கிருந்து தானே வந்திருக்கீங்கன்னு மனசுக்குள் மீண்டும் ஒருமுறை முணுமுணுத்தாள். நானும் இங்க தமிழ்நாட்டுல தான் இருந்து வந்திருக்கிறேன் சொல்றியா?ன்னு கத்துகிறாள் எஜமானி அம்மா இல்லைங்க அம்மா.. நான் எதுவுமே நினைக்கல.. நான் வேலை செஞ்ச நேரம் போக…. தூங்காமல் அந்த நேரத்தில் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். தமிழ் மீது எனக்கு ஆவல் அதிகம் அதுவும் எழுத்தின் மீது எனக்கு ஆவல் அதிகம் அதுதான் அம்மா. என்ன? உளறிகிட்டு, பைத்தியக்காரி மாதிரி என்கிட்ட இந்த உளறல் வைத்துக் கொள்ளாதே! இல்லைங்க அம்மா.. இனிமேல் நான் அப்படி செய்யமாட்டேன் என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுகின்றாள் ரமா. இந்தியாவிலிருந்து வரும் பத்திரிகைகளில் தமிழ் பத்திரிக்கையை, ரமா ஃபோனை வைத்துக் கொண்டு ஆன்லைனில் படிக்கிறாள். இதை கவனித்துவிட்டார் எஜமானி அம்மா. என்னடி? இப்ப நீ ஃபோன வச்சு பேப்பர் படிச்சிட்டு இருக்குற. வேலையை கவனிக்கிற மாதிரி இல்லையே? அம்மா அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைம்மா.. நான் வேலையை நல்லா கவனிச்சுகிட்டுதான் இருக்கிறேன். பத்திரிக்கையை படித்து முடித்த ரமாவுக்கு கடைசி பக்கத்தில் மிக்க மகிழ்ச்சியான அதிர்ச்சி தந்தது. மகளிர் தின கவிதை போட்டியில் முதல் பரிசை ஐயாயிரம் பெற்றுவிட்டதாகவும், ரமாவின் புகைப்படத்துடன் பாராட்டி வந்தததையும் படித்தாள். அளவு இல்லாத மகிழ்ச்சி அடைந்தாள். எஜமான் திட்டினதும் சக ஊழியர்கள் அனைவரும திட்டினதும், அனைவரும் நம்மில் பொறாமைபட்டது என அத்தனை கவலைகளும் ரமாவுக்கு பறந்தோடி விட்டது. முயற்சி இருந்தால் முடியாதது இல்லையே!… பெண்களாகிய நாம் அனைவரும் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவோம். முதலில் நம்மை எதிர்ப்பவர்களை வீழ்ச்சி அடைய செய்வோம். அனைத்துத் துறைகளிலும் அரும்பாடுபட்டு அருமையான பெண்மணி அப்படின்னு பெயர் எடுப்போம். பெண் என்பவள் சாதாரணமானவன் இல்லை. பெண் என்பவள் அனைத்தும் சாதிக்கப் பிறந்தவள்…

Recent posts

காலம் மாறலாம்… மனிதர்கள் மாறுவதில்லை!

யாழ்ப்பாணத்தின் வடக்கே, கிளிநொச்சியை நோக்கிச் செல்லும் பாதையில், “வன்னிப் பூமி” என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கிராமம் இருந்தது. அதன் பெயர் ‘முள்ளியவளை’. இந்த ஊரின் மண்ணுக்கும்,...
Thamil Paarvai

தமிழ் நாகரிகத்தின் அழியாச் சின்னம்

சங்கு வெறும் கடல்வாழ் உயிரினத்தின் ஓடு மட்டும் அல்ல; அது தமிழ் அடையாளங்களில் ஒன்று. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர் கலாசாரம், மொழி, சமயம் மற்றும் அன்றாட...
Thamil Paarvai

ஒரு ஆழமான பயணம்

மனிதர்களுக்கு எப்போதும் மேலே வானத்தை விட கீழே பூமியின் உட்பகுதியில் ஒரு கட்டுக்கடங்காத ஆர்வம் உண்டு. ஆனால் பூமிக்குள் நாம் எவ்வளவு தூரம் செல்ல முடியும்? உண்மையில்,...
Thamil Paarvai

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட மர்மப் பயணம்

“நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கே போகிறேன்?” – இந்த மூன்று கேள்விகளுக்கும் இடையேயே மனித வாழ்க்கையின் முழு மர்மமும் அடங்கிக் கிடக்கிறது. பிறப்பு என்பது ஒரு...
Thamil Paarvai

வெற்றியைத் தாண்டிய வாழ்க்கையின் அர்த்தம்

“வெற்றி” – இந்த ஒற்றை வார்த்தைக்காக மனிதன் தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணிக்கிறான். அதிகப் பணம், உயர்ந்த பதவி, பெரிய வீடு, விலையுயர்ந்த கார், புகழ், பட்டங்கள்...
Thamil Paarvai

கனவுகளை நோக்கிப் பயணிப்பதன் முக்கியத்துவம்

ஒரு குழந்தை பிறக்கும்போது, அதன் கண்களில் ஒரு ஒளி இருக்கிறது. அந்த ஒளிக்குப் பெயர் – கனவு. வானத்தில் பறக்கும் பறவைகளைப் பார்த்து ‘நானும் பறக்க வேண்டும்’...
Thamil Paarvai

இலங்கையின் நந்திக்கடல்: வரலாற்றின் சாட்சியாகும் ஒரு கடற்காயல்

இலங்கையின் வடகிழக்குக் கடற்கரையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள நந்திக்கடல் (Nanthi Kadal) ஒரு வெறும் புவியியல் அமைப்பு மட்டுமல்ல; அது இலங்கையின் நவீன வரலாற்றின் முக்கிய சின்னமாகவும்,...
Thamil Paarvai

மீன்வளம், சூழலியல் மற்றும் மீள்வாழ்வின் பாதை (கட்டுரையின் இரண்டாம் பகுதி)

நந்திக்கடல்: முந்தைய கட்டுரையில் நந்திக்கடலின் வரலாறு, புவியியல் மற்றும் போரின் தாக்கம் ஆகியவற்றை விரிவாகப் பார்த்தோம். இப்போது, அந்தப் பகுதியின் தற்போதைய நிலை, மீன்வள ஆய்வுகள், சூழலியல்...
Thamil Paarvai

காலம் ஒரு நதி போன்றது

மாலை ஆறு மணிக்கெல்லாம் வீதிகள் அமைதியடையத் தொடங்கும் ஒரு சிறிய கிராமம் அது. திருநெல்வேலி மாவட்டத்தின் கிழக்கே, தாமிரபரணியின் கிளை நதி ஒன்றின் கரையில் அமைந்திருந்தது அந்த...
Thamil Paarvai

Leave a Comment