ஏனையவை விளையாட்டு

பெத்ரா குவித்தோவா மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்….

அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, செக் குடியரசு வீராங்கனை பெத்ரா குவித்தோவா தகுதி பெற்றார்.நான்காவது சுற்றில் பிரான்சின் கரோலின் கார்சியாவுடன் மோதிய குவித்தோவா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 24 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 4வது சுற்றில் களமிறங்கிய ரோமானியாவின் சிமோனா ஹாலெப் 6-3இ 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்க நட்சத்திரம் வீனஸ் வில்லியம்சை வீழ்த்தினார். டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி தனது 4வது சுற்றில் 3-6, 7-6 (7-0), 2-6 என்ற செட் கணக்கில் சூ வெய் சையிடம் (சீன தைபே) தோற்று வெளியேறினார். செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 2-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் யுலியா புடின்ட்சேவாவை (கஜகஸ்தான்) வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார். கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு தனது 4வது சுற்றில் அனெட் கோன்டாவெய்ட்டுக்கு எதிராக 1-6, 0-2 என பின்தங்கிய நிலையில், காயம் காரணமாக விலகுவதாக அறிவித்தார்.இதனால் கோன்டாவெய்ட் (எஸ்டோனியா) கால் இறுதிக்கு முன்னேறினார். சீனாவின் கியாங் வாங், செக் குடியரசின் மார்கெடா வோண்ட்ரூசோவா ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். 4வது சுற்றில் பெடரர்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் தகுதி பெற்றார். 3வது சுற்றில் செர்பியாவின் பிலிப் கிராஜினோவிச்சுடன் மோதிய பெடரர் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரர்கள் கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்ரிக்கா), ஜார்டன் தாம்சன் (ஆஸி.), டானில் மெட்வதேவ் (ரஷ்யா), ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), டெனிஸ் ஷபோவலாவ் (கனடா), டேவிட் காபின் (பெல்ஜியம்), பிரான்சிஸ் டியபோ (அமெரிக்கா) ஆகியோரும் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Recent posts

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

2023 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி சோக கடலில் ரசிகர்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடையக் காரணமே இந்திய அணிக்கு எதிராக போன ஒரு முடிவு தான். இந்தியா –...
Thamil Paarvai

ஐரோப்பிய கால்பந்து போட்டி – ஜெர்மனி, போர்ச்சுக்கல் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. 24 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்றுடன் லீக்...
Thamil Paarvai

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்- நியூசிலாந்து வெற்றிக்கு 139 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும்...
Thamil Paarvai

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒலிம்பிக் தொடருக்கான சீருடையை அறிமுகம் செய்து வைத்தார்…

ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை டோக்கியாவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பதக்கம் வெல்வதற்காக இந்திய வீரர்கள்-...
Thamil Paarvai

இந்திய வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்செல்ல அனுமதி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி நாளை இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட்...
Thamil Paarvai

ஐபிஎல் போட்டி தொடரை தள்ளி வைத்தது சரியான முடிவு – வில்லியம்சன்

கடந்த மாதம் இந்தியாவில் தொடங்கிய 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின்போது சில வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஐ.பி.எல். போட்டி தொடர் காலவரையின்றி...
Thamil Paarvai

இலங்கை கிரிக்கெட்டின் வருவாய் இழப்பை சரிகட்ட கூடுதல் போட்டியில் விளையாட பிசிசிஐ சம்மதம்

இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் இலங்கை சென்று ஒயிட்-பால் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.இதை ஈடுகட்டும்...
Thamil Paarvai

ஓய்வு அறிவிப்பைத் திரும்பப்பெற ஏபி டி வில்லியர்ஸ் மறுப்பு: தென்ஆப்பரிக்கா கிரிக்கெட் வாரியம்

தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் கடந்த 2018-ம் ஆண்டு மே 23-ந்தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தன்னுடைய திடீர் ஓய்வு...
Thamil Paarvai

Leave a Comment