பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதூஷ் நாடு கடத்தப்படாவிடின் துபாய்க்கு சென்று அவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர் இதேவேளை மாகந்துரே மதூஷை நாடு கடத்துமாறு வௌிவிவகார அமைச்சுனூடாக துபாய் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
இந்தநிலையில் துபாயில் மாகந்துரே மதூஷுடன் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள அனைத்து சந்தேகநபர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முழுமையாக ஆராய்வதற்கு அது குறித்து நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் விசாரணைக் குழு தீர்மானித்துள்ளது
குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவின் தலைமையிலான இந்தக் குழு நேற்று முன்தினம் கூடி சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்