மறைந்த இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு நடிகரும், மக்கள் நீதி மைய தலைவருமான கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், மகேந்திரனுக்கும், எனக்கும் வெகுநாள் நட்பு உண்டு. நாங்கள் குறைவாக படங்கள் செய்திருந்தாலும் நட்பு வலுவாகவே இருந்தது. என் பக்கத்து ஊர்காரர், நம்பிக்கையான, திறமையான, நான் பார்த்து வியந்த மனிதர்.
முள்ளும் மலரும் படத்தில் நான் தான் நடிக்க வேண்டியது. பாலு மகேந்திராவையும் மகேந்திரனையும் எனது இல்லத்தில் சந்திக்க வைத்து, இரண்டு பேரும் சேர்ந்து படம் எடுங்கள் என்று சொன்ன பசுமையான நினைவுகள் மனதில் உள்ளது. முள்ளும் மலரும் படம் வெற்றி பெற நாங்கள் எல்லோரும் சேர்ந்து வேலை பார்த்தோம். அதன்பின்னர் பல அற்புதமான படங்களை தந்தார். அவரை பார்த்து படம் எடுக்க வேண்டும் என்று ஒரு கூட்டமே கிளம்பியது. மகேந்திரனின் நினைவுகளை தமிழ் சினிமா என்று தாங்கி நிற்கும் என்றார்.