தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டிக்கான 17 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
லசித் மலிங்க தலைமையிலான குறித்த அணியில் ஓஷாத பெர்னாண்டோ மற்றும் பிரியமல் பெரேரா மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 T-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் அதில் ஒரு டெஸ்ட் போட்டியை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
லசித் மலிங்க தலைமையிலான இலங்கை அணியில்,அவிஷ்க பெர்னாண்டோ, உபுல் தரங்க நிரோஷான் டிக்வெல்ல, குஷால் பெரேரா, குஷால் மெண்டிஸ், தன்ஜய டி சில்வா, திஸ்ஸர பெரேரா, அகில தன்ஜய, அஞ்சலோ பெரேரா, ஓஷாத பெர்னாண்டோ, கழிந்து மெண்டிஸ், பிரியமல் பெரேரா, இசுரு உதான, விஸ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித, லக்ஷன் சந்தகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.