
👉 மீனுக்கு மசாலா போடும் போது அதில் புளி தண்ணீர் அல்லது தக்காளி இரண்டை நறுக்கி, அதன் சாறு மட்டும் பிழிந்து, அதில் மசாலாவை சேர்த்து கலக்கி, பொரித்து எடுத்தால் மீன் சுவையாக இருக்கும்.
👉 மீன் பொரிக்கும் போது தவாவில் ஒட்டி கொள்ளாமல் இருக்க, மீன் மசாலாவுடன் சிறிது அரிசிமாவு சேர்த்து பிசைந்து கொள்ளலாம் அல்லது, தவாவில் அரிசி மாவை போட்டு லேசாக வருத்து விட்டு எண்ணை ஊற்றி பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும்.
👉 மீனை தூளாக்கி கீமா கட்லெட் செய்ய, மீனை முட்டையில் நனைத்து, ஊறவைத்து பிறகு பொரித்தால் எடுத்தால் சுவையான கீமா கட்லெட் தயார்.
👉 வஞ்சிர மீனுக்கு மசாலா தடவும் போது, கறி பிசைவது போல் பிசைந்து தூளாக்கி விடாமல், ஒரு கிண்ணத்தில் மசாலாவை கெட்டியாக கலக்கி கொண்டு தடவி அடுக்கி வைத்து பொரித்து எடுத்தால் ருசியாக இருக்கும்.
👉 மீன் பொரிக்கும் போது, எண்ணெயுடன் சிறிது வெண்ணெய் சேர்த்து கொண்டு பொரித்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

👉 மீனுக்கு ஒரே மாதிரி மசாலா போடாமல் ஒரு முறை மிளகாய் தூள், அடுத்த முறை சிக்கன் மசாலா, கீரீன் மசாலா, மிளகு மசாலாக்களை போட்டு பொரித்து எடுத்தால் வித்தியாசமான சுவையாக இருக்கும்.
👉 மீனுக்கு மசாலா கலக்கும் போது, அதில் இரண்டு தேக்கரண்டி ஓட்ஸ் மற்றும் கார்ன் பிளேக்ஸ் சேர்த்தால் மீன் நல்ல சுவையாகவும், மிருதுவாகவும் வரும்.
👉 சாளை மீன் குழம்பிற்கு தேங்காய் சேர்க்காமல், புளி, மீன் மசாலா மட்டும் சேர்த்துக் கொண்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
👉 மீன் பிரியாணி செய்வதற்கு முன் மீனை தயிர், இஞ்சி, பூண்டு, மஞ்சள் பொடி போட்டு பத்து நிமிடம் ஊறவைத்து பின் பிரியாணி செய்தால் பிரியாணியின் சுவை அதிகரிக்கும்.
👉 சுறாமீன் கட்லெட் செய்ய மீனை எடுத்து அதில் உப்பு, சிறிது இஞ்சி பூண்டு விழுது, சீரக தூள் சேர்த்து வேக வைத்து எடுத்து, அதில் கட்லெட் அல்லது வடை செய்தால் ருசியாக இருக்கும்.