சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் மற்றவரை ஏமாற்றியும்இ முட்டாளாக்கியும் கொண்டாடும் நாள் தான் ‘ஏப்ரல் முதல் நாள்’. பெரும்பாலான நாடுகள் இதனை கடைபிடிக்கின்றன.
கனடா, நியூசிலாந்து, லண்டன்,ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் பாரம்பரிய
விழாக்கள் போல் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
என்ன காரணம்
பிரான்சில் முதன் முதலில் இத்தினம் கொண்டாடப்பட்டது. 16ம் நுாற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்.1 தான்இ புத்தாண்டு தினமாக கடைபிடிக்கப்பட்டது. அப்போதைய ஜூலியன் காலண்டரிலும் இவ்வாறு தான் இருந்தது. பின் 13ம் போப் கிரிகோரி, 1582 பிப்., 29ல், புதிய காலண்டரை அறிமுகப்படுத்தினார். இதில் ஜன.1,புத்தாண்டாக மாற்றப்பட்டது.
இதனை ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கவில்லை. ஸ்பெயின்,போர்ச்சுக்கல், இத்தாலி போன்றவை இந்த காலண்டரை 1582 அக்., முதல் பயன்படுத்த துவங்கின. 1752ல் இங்கிலாந்து, அமெரிக்காவிலும் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவிலும் இக்காலண்டர் புழக்கத்திற்கு வந்தது.
புதிய காலண்டரை ஏற்காத நாடுகளை கிண்டல் செய்வதற்காக ‘முட்டாள்கள் தினம்’ அறிமுகமானது. நாளடைவில் அனைத்து நாடுகளும் இத்தினத்தை முட்டாள்கள் தினமாக கொண்டாடின.
– இன்று முட்டாள்கள் தினம் –
கட்டுக்கதை
கடந்த 1508 முதலே பிரான்சில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்தது என்றும், 1539ல் டச்சு மொழியில் இத்தினம் பற்றி குறிப்பிடப்பட்டு இருந்ததென்றும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. 1466ல் பிலிப்பைன்சை சேர்ந்த மன்னனை அவரது அவைக் கவிஞர் முட்டாளாக்கிய தினம் இது என்றும் ஒரு கருத்து உண்டு.