
💉 மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரபல நரம்பியலாளர் ரீட்டா லெவி மோன்டால்சினி (சுவைய டுநஎi ஆழவெயடஉini) 1909ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்.
💉 இத்தாலி அரசு 1938ஆம் ஆண்டு யூதர்களுக்கு மருத்துவத்தில் தடைவிதித்தது. இதனால், இவர் தனது அறையிலேயே ஒரு சோதனைக்கூடம் அமைத்து ஆராய்ச்சி செய்து வந்தார்.
💉 நரம்பு செல்களின் வளர்ச்சியை தூண்டும் புரோட்டீன்கள் குறித்த இவரது ஆராய்ச்சி புற்றுநோய், அல்சீமர், மலட்டுத்தன்மை சிகிச்சை முறைகளைக் கண்டறிய வழிவகுத்தன.
💉 இவருக்கு நரம்பு வளர்ச்சி காரணிகள் குறித்த கண்டுபிடிப்புக்காக 1986ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
💉 இவருக்கு ஆராய்ச்சி செய்யவும், தொழில் செய்யவும் தடை விதித்த அதே இத்தாலி அரசிடம், ‘நாட்டின் உயர்ந்த ஆராய்ச்சியாளர்” என்ற பட்டத்தை பெற்ற ரீட்டா லெவி மோன்டால்சினி 2012ஆம் ஆண்டு மறைந்தார்.