அமெரிக்காவில் ஓர் அரிய சம்பவம். குழந்தையை ஈன்றெடுத்த சில நிமிடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர் ஒரு தம்பதியர்.
திருமணத்தை நடத்திவைத்தவர் அமெரிக்க மாநிலமான இண்டியானாவின் சௌத் பெண்ட் மேயர் பீட் புட்டேஜெஜ் (Pநவந டீரவவபைநைப).
திருமணம் செய்துகொள்ளவிருந்த மேரியும் கேபும் காலை 8.15 மணிக்கெல்லாம் மேயரின் அலுவலகத்திற்குச் சென்றனர். திருமண மோதிரம் இன்னும் தயாராகவில்லை. அதனால் ரிப்பனையே மோதிரமாகப் பயன்படுத்தினர். அலுவலகத்தில் இருந்த ஊழியர்களே சாட்சிகளாயினர்.
திருமணம் முடிந்த முக்கால் மணி நேரத்தில் திருமதி மேரி கேப், மருத்துவமனைக்கு விரைந்தார். பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.