தமிழ் சினிமா நடிகர்களில் நடிகர் அஜீத்குமார் பைக் ரேஸ் வீரர். அதனால் அவர் அவ்வப்போது விதவிதமான பைக்குகளை வாங்குவார். அதேபோல் விஜயசேதுபதியும் பைக் ஓட்டுவதில் அலாதி பிரியம் கொண்டவர்.
தற்போது அவர் புதிய ரக பிஎம்டபிள்யூ பைக் ஒன்றை வாங்கியிருக்கிறார். அதன் மேல் தான் அமர்ந்திருக்கும் புகைப்படமொன்றையும் வெளியிட்டுள்ளார் விஜயசேதுபதி. அது தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதேபோல் தற்போது விஜயசேதுபதி திருநங்கையாக நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தின் டிரைலரும் வைரலாகிக் கொண் டிருக்கிறது.