மலையாள கவர்ச்சி நடிகை ஷகிலா தனது கவர்ச்சியால் தென்னிந்திய ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவரின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த நிலையில் தனது நிஜ வாழ்க்கையில் நடந்த நிகழ்வு ஒன்றை சமீபத்தில் கூறியுள்ளார் ஷகிலா.
மலையாளத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் ‘சோட்டா மும்பை’. மோகன்லால் நடித்த இந்தப்படத்தில் ஷகிலாவும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப்படத்தை நடிகர் மணியம்பிள்ள ராஜு தயாரித்திருந்தார். இந்த சமயத்தில் ஷகிலா, தனது தாயின் சிகிச்சைக்காக நிறைய பணம் தேவைப்படுவதாக கூறிஇ சோட்டா மும்பை படத்தில் தனக்கு பேசிய சம்பளத்தை முழுவதும் மொத்தமாக முதலிலேயே கொடுக்குமாறு தயாரிப்பாளரிடம் வேண்டுகோள் வைத்தாராம்.
மணியம்பிள்ள ராஜுவும் அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அவர் கேட்டபடியே அந்த பணத்தை கொடுக்க அது ஷகிலாவின் தாயாரின் சிகிச்சைக்கு ரொம்பவே உதவியாக இருந்ததாம். அந்த படத்தில் நடித்தபோது ஒரு கட்டத்தில் தயாரிப்பாளருக்கு ஒரு காதல் கடிதம் ஒன்றை கொடுத்தாராம் ஷகிலா. ஆனால் கடைசி வரை அந்த கடிதத்திற்கான பதிலை தயாரிப்பாளர் மணியம்பிள்ள ராஜு சொல்லவே இல்லையாம்.