பொதுவாக மம்முட்டி படத்தின் படப்பிடிப்பு நடைபெறும்போது ஒவ்வொரு படக்குழுவினரும் குறைந்தது, இரண்டு முறையாவது மம்முட்டி கையால் விருந்து சாப்பிடுவது வழக்கம்.. ஒன்று படப்பிடிப்பு தளத்திலேயே சுவையான பிரியாணியை வரவழைத்து அனைவருக்கும் பரிமாறுவார்.. இல்லை என்றால் ஏதாவது ஸ்டார் ஹோட்டலில் வைத்து விருந்தளிப்பார்.
அந்தவகையில் மம்முட்டி தற்போது ‘உண்ட’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் அதிரடி சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார் மம்முட்டி. இந்தப் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது மைசூரில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு படக்குழுவினர் அனைவருக்கும் மைசூரில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் விருந்து அளித்துள்ளார் மம்முட்டி. அதே சமயம் இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.