ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் நேற்று ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிடையே வைரலாகி உள்ளது.
உலகில் வைரஸ் தாக்கத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. தொழில்நுட்பம், கட்டுமானம் உள்ளிட்ட பல துறைகளில் சிறந்து விளங்கும் ஜெர்மனியில் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த ஏஞ்சலா மெர்கல் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தார். அவ்வப்போது உலக நாடுகளின் முக்கிய பிரச்னைகள் குறித்து அவர் கருத்து தெரிவிப்பது வாடிக்கை. சமீபத்தில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள காஸா பகுதியில் கடும் மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனை அடுத்து உலக நாடுகள் பல, இரு நாட்டு தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி போரை கைவிடும்படி கூறி வந்தன. தற்போது கொரோனா வைரஸ் உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் உலகில் அதிக அளவு ராக்கெட் தாக்குதல் நடந்தது. இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலின்போது தான் என்கிற தகவல் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ஐரோப்பாவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில நாட்களாக எழுந்து வந்த நிலையில் ஏஞ்சலா இதுகுறித்து ஓர் முன்னெடுப்பை எடுத்துள்ளார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைவிட காஸா பகுதியில் ஆயுதமேந்திப் போராடும் ஹமாசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சிறந்தது என ஏஞ்சலா மெர்கல் கருதுகிறார். இதனை அடுத்து இந்த அமைப்பின் முக்கியத் தலைவர்களுடன் அவர் மறைமுகப் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.