இந்தியா செய்திகள்

2030-ம் ஆண்டிற்குள் உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் : பிரதமர் நம்பிக்கை

டெல்லி: வரும் 2030-ம் ஆண்டிற்குள் உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பெட்ரோலியம், எரிவாயு தொடர்பாக 3 நாட்கள் நடைபெறும் பெட்ரோடெக்-2019 மாநாட்டை, பிரதமர் மோடி டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் தொடங்கி வைத்தார். 70 நாடுகளை சேர்ந்த 7000 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் தொடக்க உரையாற்றிய பிரதமர் மோடி,உலகளவில் மிகவேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். எரிசக்தி நீதி என்பதற்கு மத்திய அரசு முதல் முன்னுரிமை கொடுத்து வருவதாகவும், தனக்கும் அதுவே முக்கியமான இலக்கு என்றும் குறிப்பிட்டார். ஐஎம்ஏ, உலக வங்கி போன்ற முக்கிய நிறுவனங்கள் இந்தியாவில் திட்டங்கள் தொடங்க தொடர்ந்து முன்வருகின்றன.

உலக பொருளாதாரம் மந்தமான சூழ்நிலையில் இருந்த போதிலும், இந்திய பொருளாதாரம் நிலையாக இருந்தது.உலகின் 6வது மிகப் பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை சமீபத்தில் இந்தியா எட்டியதை சுட்டிக்காட்டினார். எரிசக்தி நீதியை நிலைநாட்ட மத்திய அரசு பல்வேறு கொள்கைகளை வகுத்து செயல்படுத்தியிருப்பதாகவும், அதன் மூலமே அனைத்து ஊரகப் பகுதிகளுக்கும் மின்சார வசதி சென்று சேர்ந்திருப்பதாகவும் கூறினார். ஆண்டுதோறும் இந்தியாவில் மின்தேவை 5 சதவீதம் அதிகரித்து வருகிறது. இதனால் உலகின் மின் நுகர்வோர் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

மலிவான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பயன்பாடுகளின் சங்கமம், நீடித்த வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி விரைவுபடுத்தும். 2040-ம் ஆண்டு வாக்கில் நாட்டின் எரிசக்தித் தேவை இருமடங்காகும் என குறிப்பிட்ட மோடி, அத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு சாதகமான சந்தையாக இந்தியா இருப்பதாகவும் கூறினார். ல்பிஜி இணைப்புகளின் அளவு 5 ஆண்டுகளுக்கு முன்னர் 55 சதவீதமாக இருந்தநிலையில், தற்போது 90 சதவீதத்தை கடந்திருப்பதாக குறி்ப்பிட்டார்.

Recent posts

தமிழர் DNA ஆய்வுகள் குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகள்

தமிழர்களின் மரபணு வரலாறு குறித்து உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் DNA-க்களை...
Thamil Paarvai

கனேடிய தரை எல்லையில் ஐரோப்பா: “விஸ்கி போரின்” விளைவு

டென்மார்க்குடனான 49 ஆண்டு கால ஹான்ஸ் தீவு பிரச்சினை முடிவுக்கு வந்ததன் மூலம், கனடா-ஐரோப்பா இடையே முதல் தரை எல்லை உருவாகியுள்ளது. இந்த வரலாற்று சம்பவம், தற்போது...
Thamil Paarvai

கனடாவின் “இரும்புத் தண்டுவடம்” வாஷிங்டனை அதிரவைக்கிறது

கனடியப் பிரதமர் மார்க் கார்னி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் $1 டிரில்லியன் (C$1 டிரில்லியன்) மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் மகத்தான திட்டத்தை அறிவித்துள்ளார்....
Thamil Paarvai

ட்ரம்பின் $5,000 அறிவிப்பு பரபரப்பு

2026 செப்டம்பர் 11 — இன்று அமெரிக்கா 9/11 தாக்குதலின் 25 ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு அதிபர் டொனால்ட்...
Thamil Paarvai

நூற்றாண்டு கூட்டாண்மை பிறந்தது

2026 செப்டம்பர் 10 ஆம் தேதி, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கரி நகரில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. கனடா பிரதமர் மார்க் கார்னியும்,...
Thamil Paarvai

டிரம்பின் வர்த்தகப் போர் உடைந்து விழுகிறது

டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் முன்பு நினைத்ததைப் போல வெற்றிகரமாக நடக்கவில்லை. “பெரிய புலி எப்போதும் வெற்றி பெறும்” என்ற அவரது கோட்பாடு தோல்வியடைந்து வருகிறது. கனடா...
Thamil Paarvai

கனடா அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடிய அமைச்சரவை, ஆல்பர்ட்டா மாகாணத்தின் பான்ஃப் நகரில் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தை...
Thamil Paarvai

கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
Thamil Paarvai

கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!

அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
Thamil Paarvai

Leave a Comment