சீனாவின் இன்று இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன்படி சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள அன்ஹுயி மாகாணத்துக்குட்பட்ட நெடுஞ்சாலை வழியாக வந்த 23 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன்மீது ஒன்றாக மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை குயிஸோவ் மாகாணத்தின் நெடுஞ்சாலை வழியாக சென்ற ஒரு பஸ் காரின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.