Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

4 பேருடன் விண்ணில் பாய்ந்த எலான் மஸ்கின் “பால்கன் 9” ராக்கெட்.

கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 4 வீரர்களை கொண்ட பால்கன் 9 ராக்கெட், அமெரிக்க நேரப்படி இன்று காலை 5:10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. தனியார் நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை நாசா தொடங்கியது.

இதற்காக நாசா, “crew 2” என்ற திட்டத்தை கொண்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதே இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. அதன்படி கடந்த மே மாதம், நாசா விண்வெளி வீரர்களான பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லியை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பினார்கள். அந்த சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தது.

அவர்களின் ஆராய்ச்சியை முடித்துவிட்டு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் கேப்சூல் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் பூமிக்கு திரும்பி வந்தார்கள். இந்த பயணம், நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு பெரிய வெற்றியை தந்த நிலையில் நாசா, அடுத்த 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்ப திட்டமிட்டனர்.

அதன்படி மீண்டும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் “பால்கன் 9” ரக ராக்கெட்டில் அனுப்ப திட்டமிட்டிருந்தனர். மேலும், அவர்கள் “டிராகன் கேப்சூல்” மூலம் திரும்பி வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த பயணத்திற்கு ஜப்பானை சேர்ந்த அகிஹிகோ ஹோஷைட் என்பவரும், நாசா விண்வெளி வீரர்களான ஷேன் கிம்பரோ, கே. மேகன் மெக்ஆர்தர் மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த அகிஹிகோ ஹோஷைட் உள்ளிட்ட 4 வீரர்கள் இந்த டிராகன் கேப்சூலில் பயணிக்கவுள்ளனர்.

இவர்களுக்கான பயிற்சியை நாசா வழங்கியது. குறித்த ராக்கெட், கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்று விண்ணில் பாயவிருந்த நிலையில், சூழ்நிலை சாதகமாக இல்லாததால் அமெரிக்க நேரப்படி இன்று காலை 5:10-க்கு புறப்பட்டும் என்று நாசா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 4 வீரர்களை கொண்ட பால்கன் 9 ராக்கெட், அமெரிக்க நேரப்படி இன்று காலை 5:10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. அந்த ராக்கெட், சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று, அங்கு ஆய்வுகளை முடித்த பின் வீரர்கள் பூமிக்கு திரும்பி வரவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Recent posts

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

Leave a Comment