நடிகர்கள்: அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
இயக்கம்: ஏ.எல். விஜய்

ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள மிஷன் சாப்டர் 1 படம் ஹாலிவுட் படங்களை நம்ம ஊர் ரசிகர்களுக்கு ஏற்ப இயக்கி வந்த ஏ.எல். விஜய் இந்த படத்திலும் பிரிசன் படங்களில் இருந்து இன்ஸ்பயர் ஆகி இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்.
லியோ படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த இயல் இந்த படத்தில் அர்ஜுனுக்கு மகளாக நடித்துள்ளார். அவருக்கு உடம்பில் ஒரு பெரிய பாதிப்பு. அதை சரி செய்ய பணம் தேவைப்படும் நிலையில், ஹவாலா மூலம் பணத்தை அடைகிறார் அருண் விஜய். அந்த பணத்தை திருட நடக்கும் முயற்சியில் வெளிநாட்டில் போலீஸாரை அடித்து விடும் அருண் விஜய் சிறைக்கு செல்கிறார். இஸ்லாமிய தீவிரவாதியாக காட்டப்படும் உமர் பாய் சிறையில் இருக்கும் சிலரை மீட்க முயற்சிக்க அந்த பிரிசன் பிரேக்கை தடுக்க போராடும் எமி ஜாக்சனுக்கு துணையாக நிற்கிறார் கடைசியில் தீவிரவாதிகளின் சதியை முடித்தாரா? தனது மகளை காப்பாற்றினாரா என்பது தான் மீதிக்கதை.வழக்கமாகவே ஏ.எல். விஜய் படங்கள் என்றால் டெக்னிக்கலாக ஸ்ட்ராங்காகத்தான் இருக்கும். இந்த படத்திலும் அதில் எந்தவொரு குறையும் இல்லை. மதராசப்பட்டினம் படத்தில் எமி ஜாக்சனை கோலிவுட்டில் அறிமுகப்படுத்திய ஏ.எல். விஜய் மீண்டும் அவரை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்திருக்கிறார். படம் முழுக்க அவரும் அருண் விஜய்யும் செய்யும் ஸ்டன்ட் காட்சிகள் நல்லாவே படமாக்கப்பட்டுள்ளன. நிமிஷா சஜயன் நர்ஸாக வந்து தன்னுடைய கதாபாத்திரத்தில் கலக்குகிறார்.
படத்தின் மேக்கிங், பின்னணி இசை, அருண் விஜய் மற்றும் எமி ஜாக்சனின் நடிப்பு என படத்திற்கு பல பிளஸ்கள் உள்ளன. ஆக்ஷன் விரும்பிகளை கவரும் விதமாக பல சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
படத்தின் கதை பெரிதாக எழுதப்படாதது பெரும் மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. சுவாரஸ்யமான விஷயங்களும் ரசிகர்களை தியேட்டரில் கட்டிப்போடும் விஷயங்களும் குறைவு. ஜி.வி. பிரகாஷ் இந்த படத்தில் பெரும் உழைப்பை பாடல்களில் போடவில்லை என்பது தெரிகிறது. அருண் விஜய் ரசிகர்கள் மற்றும் ஆக்ஷன் பிரியர்களை நிச்சயம் இந்த மிஷன் சாப்டர் 1 கவரும்.