ஆரோக்கியம் ஜோதிடம்

வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும்.

ஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன.அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். உங்களுக்கு வெந்தய டீ எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். மேலும் வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உங்களது அன்றாட உணவில் அதை சேர்த்து நன்மைப் பெறுங்கள்.

வெந்தய டீ தயாரிப்பது எப்படி?
* ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள்.
இப்போது வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.

நன்மை #1 மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை சந்திப்பார்கள். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

நன்மை #2 பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.

நன்மை #3 ஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

நன்மை #4 கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? அதைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும்.

நன்மை #5 வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.

நன்மை #6 வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

நன்மை #7 குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீ குடியுங்கள். இது கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.

நன்மை #8 உலகில் இதய நோயால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய இதய நோயின் தாக்கத்தைத் தடுக்க வேண்டுமெனில், தினமும் ஒரு கப் வெந்தய டீ குடியுங்கள்.

நன்மை #9 வைட்டமின் பி1 குறைபாட்டினால் ஏற்படும் பெரி பெரி நோயின் தாக்கத்தை வெந்தய டீ குறைக்க உதவும். ஆகவே அன்றாட டயட்டில் வெந்தய டீயை தவறாமல் சேர்த்து வாருங்கள்.

நன்மை #10 பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் குடித்தால், அது பிரசவ வலியைத் தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் நடக்கவும் உதவி புரியும்.

நன்மை #11 ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் வெந்தய டீ குடிப்பதன் மூலும், அவர்களின் பாலியல் வாழ்க்கை சிறக்கும். ஏனெனில் இந்த டீ உடலின் பாலுணர்ச்சியைத் தூண்டி, உறவில் சிறப்பாக ஈடுபட உதவும்.

நன்மை #12 வெந்தய டீயில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தொடர்ந்து குடித்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, தாய்ப்பாலில் சத்துக்களும் அதிகரிக்கும்.

நன்மை #13 வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. ஆகவே மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள், வெந்தய டீயைக் குடித்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக தடுக்கலாம்.

நன்மை #14 வெந்தயம் மிகச்சிறந்த சளி கரைப்பான். ஆகவே உங்களுக்கு சைனஸ் மற்றும் சளித் தொல்லை அதிகம் இருந்தால், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

நன்மை #15 வெந்தயம் சிறுநீர் பெருக்கியாக செயல்படும். ஒருவர் தினமும் பலமுறை சிறுநீர் கழிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள கசடுகள் வெளியேறும். வெந்தய டீயைக் குடித்தால், அடிக்கடி சிறுநீரைக் கழிக்கலாம்.

நன்மை #16 காய்ச்சல் அடிக்கும் போது, கண்ட மாத்திரைகளைப் போடாமல், ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் காய்ச்சல் உடனே குறைந்துவிடும்.

நன்மை #17 வெந்தய டீ பொடுகைப் போக்கும். அதற்கு தலைக்கு ஷாம்பு போட்டு முடியை அலசிய பின், இந்த வெந்தய டீயால் தலைமுடியை அலசி, பின் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இப்படி செய்வதால் பொடுகு போய்விடும்.

நன்மை #18 வெந்தய டீ தொண்டைப் புண்ணை குணப்படுத்தும். அதற்கு வெந்தய டீயை சூடாக குடிக்க வேண்டும்.

நன்மை #19 வாய் புண் அல்லது வாய் அல்சர் உள்ளதா? அப்படியெனில் தினமும் வெந்தய டீயால் வாயைக் கொப்பளியுங்கள். இப்படி தினமும் வாய் புண் போகும் வரை செய்யுங்கள்.

நன்மை #20 வெந்தய டீ வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதிலும் வெந்தய டீயை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்ற பிரச்சனை நீங்கும்

Recent posts

அடிக்கடி சளி தொல்லையா?

🤧 சளி பிடித்தல் என்பது பொதுவான பிரச்சனையாகும். சிலருக்கு கால சூழ்நிலையின் காரணமாகவோ, அருகில் இருப்பவருக்கு சளி பிடித்திருந்து நோய்த்தொற்று ஏற்பட்டாலோ சளி பிடிக்கலாம். ❄️ குளிர்காலம்...
Thamil Paarvai

பெரியோர்களை பார்த்தால் காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?

ஆசீர்வாதம் என்றால் என்ன? 🙇 ஆசீர்வாதம் என்பது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம்...
Thamil Paarvai

இரத்தத்தை சுத்தமாக்க உதவும் சில உணவு வகைகள்

எமது உடலில் ஓடும் இரத்தமானது உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்குவகிக்கிறது. இதனால் இரத்தத்தை சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகிறது. உடலின் எல்லா செயற்பாடுகளுக்கும் இரத்தம் இன்றியமையாதது. இரத்தத்தில்...
Thamil Paarvai

பெண்கள் வளையல் அணிவதற்கான முக்கிய காரணங்கள்.

அழகிற்காக கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பெண்கள் உடைக்கு ஏற்ற நிறங்களில் வளையல்கள் அணிய ஆசைப்படுவர். அதற்கு காரணம் கைகளை அழகுபடுத்திக் கொள்ள தான் என்றாலும் உடைக்கு...
Thamil Paarvai

தோல்விக்கு காரணமும் கிரகங்களே!

தோல்விக்கு காரணமும் கிரகங்களே!ஒரு மனிதனின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுக்கூடிய தடை, தடங்கல், தோல்விகள் ஏற்படுவதற்கும் கிரக திசா புத்திகள், கோச்சார கிரக நிலைகளே காரணமாக இருக்கின்றன. பலம்...
Thamil Paarvai

இருவிதமான திருமண தோஷங்கள்

திருமணம் பார்க்கும்போது இருவிதமான தோஷங்கள் மக்கள் மத்தியில் நடைமுறையில் உள்ளது. அவைகள்1.செவ்வாய் தோஷம்2.ராகு-கேது தோஷம் செவ்வாய் தோஷம் : செவ்வாய் தோஷம் என்னவென்பதை அறிந்து கொண்டால் அதற்கு...
Thamil Paarvai

உணவுக்கு முன்னும், பின்னும் தண்ணீர் குடிப்பது.. நல்லதா?.. கெட்டதா?..

தண்ணீர் குடித்தல்:உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிக இன்றியமையாதது. இதனால்தான் தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர்.ஆனால் உணவு உண்பதற்கு முன்பு...
Thamil Paarvai

திருமணமும், ஜாதகமும்…!!

திருமணம் பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும், அதில் நடைபெறும் சடங்குகள் சம்பிரதாயங்கள் பற்றியும், நாம் இதுவரை விரிவாக பார்த்தோம். இனி திருமணத்தில் மணமக்களின் ஜாதகத்தின் முக்கியத்துவம் யாது...
Thamil Paarvai

ரம்புட்டான் பழத்தில் இத்தனை நன்மைகள் இருக்கா?

👉 பொதுவாகவே நாம் சாப்பிடும் உணவுகளாக இருந்தாலும் சரி பழமாக இருந்தாலும் சரி அனைவரும் சத்துகள் நிறைந்துள்ள பழத்தை தான் அதிகமாக எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். அதில் ஒன்று...
Thamil Paarvai

Leave a Comment