அனிதா உதூப் இயக்கத்தில் ஓவியா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் 90 எம்எல். சிம்பு இசையமைத்துள்ளார். இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களும், சர்ச்சையும் எழுந்தன. அதையடுத்து, பழத்தை சாப்பிடும் முன்னரே விதையை பற்றி தீர்மானிக்காதீர்கள், முழு படத்தையும் பார்த்துவிட்டு பேசுங்கள் என காட்டமாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் ஓவியா.
இந்த நிலையில் பிப்ரவரி 22-ந்தேதி 90 எம்எல் படம் திரைக்கு வருவதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார் ஓவியா. அதோடு, மாஸ் நடிகர்களின் படங்களைப்போன்று இந்த படத்தின் முதல் காட்சியை அதிகாலை திரையிடுகிறார்கள். இந்த காட்சியின்போது ரசிகர்களுடன் படம் பார்க்க இருப்பதாக ஓவியா தெரிவித்துள்ளார்.