பிரிட்டனில் ஓர் ஆடவர் HIV கிருமித் தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்திருப்பதாக அவருடைய மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
எலும்புக்கூழ் மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் அவரின் உடலிலிருந்த நோய்க்கிருமி முழுமையாக நீக்கப்பட்டது.
HIVக்கு எதிரான தடுப்புச் சக்தி உடைய ஒருவரின் எலும்புக்கூழ், கிருமியால் பாதிக்கப்பட்டவரின் உடலில் ஏற்றப்பட்டது.
சிகிச்சை 3 வருடங்களுக்கு நீடித்தது.
குணமடைந்த பின், அவரைப் பரிசோதித்துப் பார்த்தபொழுது கிருமி இருப்பதற்கான தடயங்கள் எதுவும் தென்படவில்லை என்று அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் ரவீந்திர குப்தா கூறினார்.
1980களிலிருந்து இன்றுவரை உலகம் முழுவதும் எயிட்ஸ் நோயால் 35 மில்லியன் மக்கள் மாண்டனர்.
HIV கிருமியால் உண்டாகும் எயிட்ஸ் நோய்க்குத் தற்பொழுது தீர்வு இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் அந்தக் கிருமியை முற்றிலும் அழிக்கமுடியும் என்ற நம்பிக்கையை இந்த வெற்றி அளித்துள்ளது என்று திரு ரவீந்திரா கூறினார்.