நடிகர் பார்த்திபன் – நடிகை சீதா தம்பதிகளின் இளைய மகள் அபிநயாவிற்கும், பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரனும், நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் பேரனுமான நரேஷ் கார்த்திக்கிற்கும் நேற்று(மார்ச் 24) திருமணம் நடந்தது. இதில் திரையுலகினர் திரண்டு வந்து வாழ்த்தினர்.
ராதாரவி , லதா ரஜினிகாந்த், ஆர்.பி.சவுத்ரி, இயக்குனர் எழில், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், மாணிக்கம் நாராயணன், கே.பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், ஈஸ்வரி ராவ், நிரோஷா, சாந்தனு பாக்யராஜ், நடிகர் கார்த்தி, இயக்குனர் விக்ரமன், மயில்சாமி, மோகன், சித்ரா லக்ஷ்மணன், தங்கர் பச்சான், ராதிகா சரத்குமார், பாண்டியராஜன், பிரித்திவிராஜன், பானுப்ரியா, சூரிஇ சத்யஜோதி தியாகராஜன், நடிகை அருணா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகை சாரதா, ராஜஸ்ரீ, சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோர் மணமக்களை வாழ்த்தியவர்களில் முக்கியமானவர்கள். திருமணத்திற்கு வந்திருந்தவர்களை சீதாவும், பார்த்திபனும், மகள் கீர்த்தனாவும் வரவேற்றனர்.