தேசியத் தலைவர் பிரபாகரன் கிளிநொச்சியில் இருக்கின்றபோது ரவூப் ஹக்கீம் அவர்களை சென்று சந்தித்திருந்தார். அப்போது கூட உங்களின் உணவுக்காக ஒரு சமையல்காரரை கூட்டி வாருங்கள் என்று பெருந்தன்மையாக கூறியிருந்தார் பிரபாகரன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழர்கள் கொல்லப்பட்டதை மறைத்து அமைச்சுப் பதவிகளுக்காக ஹக்கீம் இவ்வாறு நடந்து கொள்ள கூடாது.
எமது மக்கள் இரசாயன குண்டுகளுக்குள் சிக்கி இறந்த போது ஹக்கீம் உள்ளிட்ட எந்தவொரு முஸ்லிம் தலைவரும் வாய் திறக்கவில்லை.
ஆனால் தேசியத் தலைவர் பிரபாகரன் கிளிநொச்சியில் இருக்கின்றபோது ரவூப் ஹக்கீம் அவர்களை சென்று சந்தித்திருந்தார். அப்போது கூட உங்களின் உணவுக்காக ஒரு சமையல்காரரை கூட்டி வாருங்கள் என்று பெருந்தன்மையாக கூறியிருந்தார் பிரபாகரன்.
அவர்களின் உணவுகளைக் கூட அவர்களுக்கு வழங்கும் நிலைமையை உருவாக்கிக் கொடுத்தார் பிரபாகரன்.
மட்டக்களப்பு, அம்பாறை அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த கௌசல்யன் வீர மரணம் அடைந்தபோது ஏராளமான முஸ்லிம் மக்கள் அழுதனர்.
அவ்வாறு இருக்கையில் ஹக்கீம் இவ்வாறு மோசமான கருத்துக்களை முன்வைப்பது தவறானது.
எமது மக்களின் மனதை புரிந்து கொள்ளாமல் அமைச்சுக்களை ம்டடும் இலக்கு வைத்து இவ்வாறு செயற்படுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.