ஆன்மீகம் இந்து சமயம்

முன்னோர்களை ஏன் வணங்க வேண்டும் – தர்ப்பணம் கொடுக்க சிறந்த நேரம்

தை மாதத்தில் மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கின்றார். அதாவது சனியின் வீடான மகரத்தில் அவரது தந்தையான சூரியன் பிரவேசிக்கின்றார். இதனால் சூரியனை பிதுர்காரகன் என்றும், சந்திரனை மாதுர்காரகன் என்றும் நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.

சூரியனும், சந்திரனும் சனியின் வீட்டில் சஞ்சரிப்பதால் தை அமாவாசை கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. மேலும், ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம் தை அமாவாசையன்று விடைகொடுத்து அனுப்புகிறோம்.

அதன்படி நாளை தை 29ம் தேதி அதாவது பிப்ரவரி 11ஆம் தேதி தை அமாவாசை தினமாகும். அந்நாளில் முன்னோர்களை எவ்வாறு வழிபட வேண்டும்? என்பதைப் பற்றி பார்க்கலாம்.

வழிபாடு :

தெய்வத்தை தொழுது பெறக்கூடிய ஆசீர்வாதத்தை விட, நம் முன்னோர்களை வழிபட்டு அவர்களின் ஆசி வாங்குவது தான் நம் குடும்பத்தை நல்ல முறையில் வாழ வைக்கும் என்பது ஐதீகம்.

கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை முன்தினமே ஊறவைத்து பசுவிற்கு தானமாக வழங்க வேண்டும்.

அமாவாசை தர்ப்பணம் செய்ய உகந்த நேரம்.

💥 சூரிய உதயத்திற்கு பின்பு அமாவாசை திதி முடிவதற்குள் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

💥 காலை 10 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு.

💥 ராகு, எமகண்டம், குளிகை நேரங்களை தவிர மற்ற நேரங்களில் திதி கொடுக்கலாம்.

எள்ளும், நீரும் இறைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடலாம்.

துளசி இலைகளைப் பறித்து முன்னோர் படங்களுக்கு சமர்ப்பிக்கலாம்.

பித்ரு காரியங்களைச் செய்த பிறகு, தான தர்மங்கள் செய்வதால் கூடுதல் பலன் உண்டாகும்.

தை அமாவாசையன்று ஓர் ஏழைக்காவது உணவிடுதல் நன்மை பயக்கும். அதேபோல் காகம் மற்றும் பசுக்களுக்கு உணவிடுவதும் நல்லது.

தை அமாவாசையன்று புனித நீராடுவது, விரதம் இருப்பது, மாலையில் ஆலய தரிசனம் செய்வது என அனைத்தும் நம்மை புண்ணியவானாக்கும்.

சிரார்த்தம், தர்ப்பணம், பித்ரு காரியம், படையல் ஆகியவை அனைத்தும், நம் முன்னோர்களை சென்றடைந்து, அவர்களின் ஆத்மாக்களைக் குளிர்விக்கும். மகிழ்ந்து அவர்கள் தரும் ஆசி, நம்மை மட்டுமல்ல நம் சந்ததியையும் வாழவைக்கும்.

அமாவாசையன்று செய்யக்கூடாதவை :

சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் செய்யும் நாளில் வீட்டு வாசலில் கோலம் இடக்கூடாது. மேலும் பூஜையறையில் தீபம் ஏற்றக்கூடாது. பூஜையின்போது பித்ருக்கள் வரும் நேரத்தில், இறை தொடர்புடைய காரியங்களைச் செய்யக்கூடாது.

நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடிதான் கொடுக்க வேண்டும்.

பலன்கள் :

தை அமாவாசை வழிபாடு செய்வதன் மூலம் பித்ருக்கள் நற்கதியை அடைவதும், திருப்தி அடைவதும் மட்டுமல்லாமல்… நம் வாழ்வில் நற்பலன்களும் பெருகும். மேலும் கடன் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

தை அமாவாசை திருநாளான நாளை புண்ணிய நதி தீர்த்தங்களிலோ அல்லது உங்கள் வீடுகளிலோ, அவரவர் வழக்கப்படி முன்னோர்களுக்கு உரிய வழிபாடுகளை செய்து ஏழேழு தலைமுறைக்கும் புண்ணிய பலன்களைப் பெற்று வாழுங்கள்…!!

Recent posts

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

சிலுவையில் இயேசு கிறிஸ்து கூறிய கடைசி ஏழு வார்த்தைகள் யாவை, மற்றும் அவற்றின் அர்த்தம் என்ன?

இயேசு கிறிஸ்து சிலுவையில் கூறிய ஏழு கூற்றுக்கள் இவை தான் (இங்கே எந்த குறிப்பிட்ட வரிசையிலும் இவை கொடுக்கப்படவில்லை): (1) மத்தேயு 27:46 கூறுகையில், ஒன்பதாம் மணி...
Thamil Paarvai

சிலுவையில்இயேசுகூறியஏழுஉபதேசங்கள்

முன்னுரை: கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் கூறிய ஏழு வார்த்தைகளை இங்கு உபதேசங்களாக உங்களுக்கு வெளிப்படுத்திக் கொடுக்க விரும்புகிறேன். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு கருத்தை...
Thamil Paarvai

புனித வெள்ளி என்ற பெயர் வருவதற்கான காரணம் என்ன தெரியுமா?

கிறிஸ்தவர்களால் அனுஸ்டிக்கப்படும் ஒரு புனித நாளாக இந்த புனித வெள்ளி எனும் நாள் அனுஸ்டிக்கப்படுகிறது. இது பொதுவாக கத்தோலிக்க மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இயேசுபிரான் உயிர்...
Thamil Paarvai

இயேசு ராஜாவாக வருகிறார்

எருசலேமுக்கு அருகிலுள்ள ஒரு சின்ன கிராமத்திற்கு இயேசு வருகிறார். தம்முடைய சீஷரில் இருவரிடம், நீங்கள் கிராமத்துக்குள் போங்கள், அங்கே ஒரு கழுதைக்குட்டியைப் பார்ப்பீர்கள். அதை அவிழ்த்து என்னிடம்...
Thamil Paarvai

முருகனுக்கு உகந்த தைப்பூச நாளின் சிறப்புகள்..

🦚 முருகப்பெருமானின் அருளை பெற்றுத்தரும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது. சக்தியின் வெளிப்பாடும், தெய்வாம்சமும் பொருந்திய காலம்தான் தை மாதம். தை மாதத்தில் பௌர்ணமியன்று பூசம்...
Thamil Paarvai

தைப்பூசத்திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்”

தைப்பூசத்தின் சிறப்புகள் பூச நட்சத்திர நாள் முருகப்பெருமானுக்கு மிகவும் விசேஷமான நாள் ஆகும். இந்நாளில் தான் முருகப்பெருமான் தாரகாசுரனை வதம் செய்ய தாய் பார்வதியிடம் வேல் வாங்கினார்....
Thamil Paarvai

கோவில்களில் மறந்து கூட இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்

1. கோயிலில் தூங்கக் கூடாது.2. தலையில் துணி, தொப்பி அணியக்கூடாது.3. கொடிமரம், நந்தி, பலிபீடம், இவைகளின் நிழல்களை மிதிக்கக் கூடாது.4. விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது) வணங்கக்...
Thamil Paarvai

வரவிருக்கிறது கிருஷ்ண ஜெயந்தி கிருஷ்ணரை வரவேற்க தயாராவோம்.

கிருஷ்ணஜெயந்தி…!!  ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு புராண கதை உண்டு. அதுபோலவே கோகுலாஷ்டமிக்கும் ஒரு கதை உண்டு. கோகுலாஷ்டமி குழந்தை கிருஷ்ணனின் புகழை சொல்லக்கூடியது.  தசாவதாரத்தில் ஓர் அவதாரம்...
Thamil Paarvai

Leave a Comment