சிறுகதை சிறுவர் பக்கம்

மூன்று மந்திரங்கள்.

ஆஷா என்ற ஒரு பெண் அவளது தாய் மற்றும் தந்தையுடன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தாள். ஒரு நாள், அவளுடைய தந்தை அவளுக்கு ஒரு எளிய பணியை வழங்கினார். கொதிக்கும் நீரில் நிரப்பப்பட்ட மூன்று பாத்திரங்களை எடுத்துக் கொண்டார். அவர் ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டையையும், இரண்டாவது பாத்திரத்தில் ஒரு உருளைக்கிழங்கையும், மூன்றாவது பாத்திரத்தில் சில தேயிலை இலைகளையும் வைத்தார்.

சுமார் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் பாத்திரங்களைக் கண்காணிக்க ஆஷாவிடம் சொன்னார். சொன்ன நேரத்திற்குப் பிறகு, ஆஷாவிடம் உருளைக்கிழங்கு மற்றும் முட்டையை உரிக்கவும், தேயிலை இலைகளை வடிகட்டவும் என்று சொன்னார்.

ஆஷா குழப்பமடைந்துவிட்டாள் – அவளுடைய தந்தை அவளுக்கு ஏதாவது விளக்க முயற்சிக்கிறார் என்று அவள் புரிந்துகொண்டாள், ஆனால் அது என்னவென்று அவளுக்குத் தெரியவில்லை.

‘மூன்று பொருட்களும் ஒரே சூழ்நிலையில் வைக்கப்பட்டன. அவைகள் எவ்வாறு வித்தியாசமாக மாறி இருக்கிறது பாரு” என்று அவளது தந்தை விளக்கினார். உருளைக்கிழங்கு மென்மையாக மாறியது, முட்டை கடினமாக மாறியது, மற்றும் தேயிலை இலைகள் தண்ணீரின் நிறத்தையும் சுவையையும் மாற்றின என்று அவர் கூறினார்.

அவர் மேலும், ‘நாம் அனைவரும் இந்த பொருட்களில் ஒன்றைப் போன்றவர்கள் தான் என்று கூறினார். துன்பம் வரும்போது, ​​அவைகள் மாறும் விதத்தில் நாம் மாறிவிடுகிறோம். இப்போது, ​​நீ ஒரு உருளைக்கிழங்கா, ஒரு முட்டையா அல்லது தேயிலை இலைகளா?” அது உன்னை பொருத்தே இருக்கும்.

நீதி : ஒரு கடினமான சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்பதை நாம் தேர்வு செய்யலாம்.

Three Mantra′s.

There was a girl named Asha who lived with her mother and father in a village. One day, her father assigned her a simple task. He took three vessels filled with boiling water. He placed an egg in one vessel, a potato in the second vessel, and some tea leaves in the third vessel.

He asked Asha to keep an eye on the vessels for about ten to fifteen minutes. After the said time, he asked Asha to peel the potato and egg and strain the tea leaves.

Asha was left puzzled – she understood her father was trying to explain to her something, but she didn′t know what it was.

Her father explained, “All three items were put in the same circumstances. See how they′ve responded differently.” He said that the potato turned soft, the egg turned hard, and the tea leaves changed the colour and taste of the water.

He further said, “We are all like one of these items. When adversity calls, we respond exactly the way they do. Now, are you a potato, an egg, or tea leaves?” it′s up to you.

Moral : We can choose how to deal with a difficult situation.

Recent posts

17 ஒட்டகங்களும் 3 மகன்களும்: முன்பொரு காலத்தில், பாலைவனத்திற்கு அருகிலுள்ள ஒரு தனிமையான கிராமத்தில் ஒரு முதியவர் தனது மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். அவரிடம் 17...
Thamil Paarvai

ஒரு வணிகரும் அவரது கழுதையும்:

வசந்த காலத்தின் ஒரு அழகான காலைப் பொழுதில், ஒரு வணிகர் உப்பை விற்பதற்காகச் சந்தைக்குக் கொண்டு செல்லத் தனது கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றினார். வணிகரும்...
Thamil Paarvai

அறிவற்ற குரங்குகள்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மிகப் பெரிய, அடர்ந்த மற்றும் இருண்ட காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டிற்கு ஒரு குரங்கு கூட்டம் வந்தது. அது குளிர்காலமாக இருந்ததால்,...
Thamil Paarvai

மகிழ்ச்சியின் ரகசியம்

முன்னொரு காலத்தில், சாமுவேல், திமோதி மற்றும் ஜாண்டர் ஆகிய மூன்று சகோதரர்கள் காட்டிற்கு அருகில் இருந்த ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தனர். அவர்கள் நேர்மையானவர்களாகவும் கடின...
Thamil Paarvai

மிகவும் அழகான இதயம்

ஒரு நாள், மக்கள் கூட்டம் நிறைந்த ஓர் இடத்தில், ஒரு இளைஞன் சத்தமாகப் பேசத் தொடங்கினான். “மக்களே, என்னைப் பாருங்கள். உலகிலேயே மிக அழகான இதயம் என்னிடம்தான்...
Thamil Paarvai

உலகை அல்ல, உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

முற்காலத்தில், ஒரு மன்னரின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். செல்வம் செழித்திருக்க, எவ்விதத் துன்பமும் இன்றி மக்கள் வளமான வாழ்க்கையை வாழ்ந்ததால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக...
Thamil Paarvai

உதவாத நண்பர்கள்:

காட்டில் ஒரு முயல் வசித்து வந்தது. அதற்குப் பல நண்பர்கள் இருந்தனர்; தன் நண்பர்களைக் குறித்து அது பெருமை கொண்டிருந்தது. ஒரு நாள், காட்டு நாய்கள் சத்தமாக...
Thamil Paarvai

வலிமையானதா அல்லது பலவீனமானதா?

காட்டில் ஒரு செருக்குமிக்க தேக்கு மரம் இருந்தது. அது உயரமாகவும் வலிமையாகவும் இருந்தது. அந்த மரத்திற்கு அருகில் ஒரு சிறிய செடி வளர்ந்து வந்தது. தேக்கு மரம்,...
Thamil Paarvai

பேராசை பிடித்த சிறுவன்:

சாம் மற்றும் டாம் இருவரும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரட்டையர்கள். அவர்கள் பார்ப்பதற்கு எவ்வளவு ஒரே மாதிரியாக இருந்தார்கள் என்றால், அவர்களின் ஆரம்பக்கால நாட்களில் அவர்களது...
Thamil Paarvai

Leave a Comment