அழகு ஆரோக்கியம் இயற்கை அழகு பொது மருத்துவம்

அருகம்புல்லின் மருத்துவ பயன்கள்.

அருகம்புல் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட புல்வகையைச் சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகை செடியாகும். எளிதில் அனைவருக்கும் கிடைக்கும் அருகம்புல், இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும்.

சிறப்புகள் :

👉 அருகம்புல் பசுமையான, அகலத்தில் குறுகிய, நீண்ட கூர்மையான இலைகளை தாவரம் முழுவதிலும் கொண்டுள்ளது. இது ஈரப்பாங்கான வயல் வரப்புகள், தரிசு நிலங்கள் மற்றும் சாலை ஓரங்களில் மிகுதியாகக் காணப்படும்.

👉 உடல் வெப்பத்தை அகற்றி, சிறுநீரைப் பெருக்கும், உடலைப் பலப்படுத்தும், குடல் புண்களை ஆற்றும்.

👉 அருகு, பதம், தூர்வை, மேகாரி ஆகிய தமிழ்ப் பெயர்களும் அருகம்புல்லுக்கு உண்டு.

அருகம்புல்லின் பயன்கள் :

👉 அருகம்புல்லுக்கு பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. அருகம்புல்லில் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் உள்ள பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.

👉 நல்ல தளிர் அருகம்புல்லைச் சேகரித்து, சுத்தமாக நீரில் கழுவி, நன்றாக அரைத்து பசும்பாலுடன் சேர்த்து சுண்டக் காய்ச்சி, இரவில் படுக்கச் செல்லும் முன் சாப்பிட்டு வந்தால், பலவீனமான உடல் நன்கு தேறி, நல்ல பலம் பெறும். வளரும் குழந்தைகள் எளிதாக ஊட்டச்சத்துப் பெற இதே முறையைக் கையாளலாம்.

👉 உடலின் இரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு உதவியாக உள்ளது. மேலும் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், இரத்தச் சோகை, இரத்த அழுத்தத்தையும் அது சீராக்குகிறது.

👉 வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வரலாம்.

👉 நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்சனைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது. நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.

👉 சொறி, சிரங்கு, வெண் புள்ளி, தேமல், அரிப்பு, விஷக்கடி போன்ற தோல் வியாதிகளுக்கு அருகம்புல் மிகச்சிறந்த மருந்து.

👉 அருகம்புல் சாறு பருகினால் சர்க்கரை நோயால் ஏற்படும் கால் எரிச்சல், முழங்கால் வலி, உடல் சோர்வு, கை கால் நடுக்கம் போன்றவை படிப்படியாக குறையும். அருகம்புல்லில் வைட்டமின்-ஏ, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து இருப்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

👉 ஞாபக சக்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும். ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் உண்டாகும் மன உளைச்சல் மற்றும் மன இறுக்கத்தை நீக்கும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

Recent posts

தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகை நேரம்

நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம் போன்றவற்றின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நீங்கள் குளிகை நேரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். யார் அந்த...
Thamil Paarvai

அடிக்கடி சளி தொல்லையா?

🤧 சளி பிடித்தல் என்பது பொதுவான பிரச்சனையாகும். சிலருக்கு கால சூழ்நிலையின் காரணமாகவோ, அருகில் இருப்பவருக்கு சளி பிடித்திருந்து நோய்த்தொற்று ஏற்பட்டாலோ சளி பிடிக்கலாம். ❄️ குளிர்காலம்...
Thamil Paarvai

பெரியோர்களை பார்த்தால் காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?

ஆசீர்வாதம் என்றால் என்ன? 🙇 ஆசீர்வாதம் என்பது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம்...
Thamil Paarvai

இரத்தத்தை சுத்தமாக்க உதவும் சில உணவு வகைகள்

எமது உடலில் ஓடும் இரத்தமானது உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்குவகிக்கிறது. இதனால் இரத்தத்தை சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகிறது. உடலின் எல்லா செயற்பாடுகளுக்கும் இரத்தம் இன்றியமையாதது. இரத்தத்தில்...
Thamil Paarvai

பெண்கள் வளையல் அணிவதற்கான முக்கிய காரணங்கள்.

அழகிற்காக கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பெண்கள் உடைக்கு ஏற்ற நிறங்களில் வளையல்கள் அணிய ஆசைப்படுவர். அதற்கு காரணம் கைகளை அழகுபடுத்திக் கொள்ள தான் என்றாலும் உடைக்கு...
Thamil Paarvai

புகைபிடிக்கும் சிகரெட்டுகளின் ஆரோக்கிய விளைவுகள்.

சிகரெட் புகைப்பதால் உடல்நல பாதிப்புகள் இருப்பதை எல்லோருக்கும் தெரியும். புகைபிடித்தல் மூக்குக்கு வெறுக்கத்தக்கது, மூளைக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் நுரையீரலுக்கு ஆபத்தானது. புகைபிடித்தல் என்பது உங்களுக்கு ஏற்படக்கூடிய...
Thamil Paarvai

உணவுக்கு முன்னும், பின்னும் தண்ணீர் குடிப்பது.. நல்லதா?.. கெட்டதா?..

தண்ணீர் குடித்தல்:உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிக இன்றியமையாதது. இதனால்தான் தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர்.ஆனால் உணவு உண்பதற்கு முன்பு...
Thamil Paarvai

ரம்புட்டான் பழத்தில் இத்தனை நன்மைகள் இருக்கா?

👉 பொதுவாகவே நாம் சாப்பிடும் உணவுகளாக இருந்தாலும் சரி பழமாக இருந்தாலும் சரி அனைவரும் சத்துகள் நிறைந்துள்ள பழத்தை தான் அதிகமாக எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். அதில் ஒன்று...
Thamil Paarvai

இரவு நேரங்களில் மரத்தின் அடியில் தூங்கக்கூடாது ஏன்?

😴 இரவு நேரங்களில் நாம் நல்ல உறக்கத்தை மேற்கொள்வது மிகவும் அவசியம். அதாவது 8 மணிநேரம் உறக்கம், கட்டாயம் தேவையான ஒன்றாகும். பெரும்பாலானோர் பகல் நேரத்தில் மரத்தின்...
Thamil Paarvai

Leave a Comment