பிரித்தானிய அரசாங்கம், தற்போது பரவி வரும் இந்திய உரு மாறிய கொரோனா தொடர்பான சரியான தகவலை வெளியிட வில்லை என ஆங்கில ஊடகங்கள் சாடியுள்ளது.
காரணம் 2 வைத்தியசாலையில் இருந்து. ஒருவருக்கு ஒருவர் பரிமாறிய மின்னஞ்சல் தற்செயலாக வேறு ஒரு நபருக்கு சென்றுவிட்ட நிலையில் , அந்த மின்னஞ்சலில் , ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 300 கொரோனா தொற்றாளர்கள் அவசர சிகிச்சை பிரிவிற்கு வந்து செல்வதாகவும் அதில் 1,200 பேரை தாம் , அட்மிட் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் பான்ஸ்லி என்னும் அந்த மருத்துவமனையில், இனி எந்த ஒரு கட்டிலும் காலியாக இல்லை எனவும் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் பிரித்தானிய அரசு தொடர்ந்து நிலமை கட்டுப்பாட்டினுள் இருக்கிறது, என்று கூறி வருகிறது. ஆனால் நிலமை அப்படி அல்ல என்றும், பல வைத்தியசாலையில் இந்திய உரு மாறிய கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளபோது அவர்கள் தொடர்பாக அரசாங்கம் எந்த ஒரு அறிவித்தலையும் வெளியிட வில்லை என்பதே உண்மை எனவும் அந்த ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.