2022ஆம் வருடமானது கும்ப ராசி அன்பர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து சூழ்நிலைக்கேற்ப செயல்படுவதன் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும்.
பொருளாதாரம் :
பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் குறையும். பத்திரம் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படுதல் நன்மையை ஏற்படுத்தும். பாகப்பிரிவினை தொடர்பான பங்குகள் காலதாமதமாக கிடைக்கும்.
பெண்களுக்கு :
பெண்களுக்கு தனவரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் படிப்படியாக மறையும். உடன்பிறந்தவர்களிடம் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத்துணைவரின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படித்து எழுதிப் பார்ப்பது நல்லது. ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகம் சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். இடமாற்றம் தொடர்பான சிந்தனைகளின் மூலம் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் சாதகமான சூழ்நிலையை உருவாக்க இயலும். முக்கியமான பொறுப்புகளில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
வியாபாரிகளுக்கு :
வியாபார பணிகளில் சிறு சிறு தடைகளுக்குப் பின்பு நிலையான முன்னேற்றத்தை அடைவீர்கள். வேலையாட்களின் திறமையை அறிந்து அதற்குத் தகுந்தாற்போல் பணிகளை கொடுப்பது நல்லது. பணி நிமிர்த்தமாக வெளியூர் பயணங்கள் செல்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படும்.
அரசியல்வாதிகளுக்கு :
சமூகப் பணிகளில் இருப்பவர்கள் வேகத்தை விட விவேகத்தை கையாளுவது நல்லது. புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். கருத்துக்களில் கனிவுடன் இருப்பது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு கற்பனை வளமும், எழுத்து புலமையும் மேம்படும். உண்மை நிலைகளை அறிந்து செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். எதிர்பாராத சில வெளியூர் பயண வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
நன்மைகள் :
புதுமையான வியூகங்கள் மற்றும் நுட்பமான சிந்தனைகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகளை உருவாக்கி நன்மதிப்பையும், செல்வாக்கையும் பெருக்கிக் கொள்வதற்கான வருடமாக பிறக்கின்ற புத்தாண்டு அமையும்.
கவனம் :
குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையுடனும், கடன் சார்ந்த விஷயங்களில் நிதானமாகவும், உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடனும் நடந்து கொள்வது நல்லது.
வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் நரசிம்மரை வழிபாடு செய்துவர செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் விலகும்.