ஐபிஎல்-இல் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல்-இன் இன்றைய (செவ்வாய்கிழமை) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் களமிறங்கிய வேகத்தில் வரிசையாக பெவிலியனுக்கு நடையை கட்டினர். முதல் ஓவரில் சாஹர் பந்தில் கிறிஸ் லின் ஆட்டமிழந்தார். 2-ஆவது ஓவரில் ஹர்பஜன் சிங் பந்தில் சுனில் நரைன் ஆட்டமிழந்தார். 3-ஆவது ஓவரில் சாஹர் பந்தில் ராணா ஆட்டமிழந்தார். இதையடுத்துஇ 5-ஆவது ஓவரில் உத்தப்பாவையும் சாஹர் வீழ்த்தினார். இதனால், அந்த அணி 24 ரன்களுக்குள் 4 முக்கியமான விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அதன்பிறகு, ஓரளவு தாக்குப்பிடித்த கொல்கத்தா கேப்டன் கார்த்திக் மற்றும் ஷூப்மன் கில்லை தாஹிர் வீழ்த்த அந்த அணி இன்னும் இக்கட்டான நிலைக்கு சென்றது. இதனால்இ ரஸல் கொல்கத்தா அணிக்கான பேட்டிங் பொறுப்பை ஏற்று விளையாடினார். எனினும் அவரும் தாஹிர் பந்தில் தூக்கி அடிக்க முயன்று ஆட்டமிழந்திருக்கக்கூடும். ஆனால், அந்த கேட்சை ஹர்பஜன் தவறவிட்டதால் ரஸலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், சாவ்லா அவருக்கு ஒத்துழைப்பு தராமல் ஹர்பஜன் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குல்தீப் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க கொல்கத்தா அணி 79 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது.
இதனால், தனிநபராக இருந்த ரஸல் பெரும்பாலான ஸ்டிரைக்கை தானே எடுத்து விளையாடினார். எனினும், அவரால் வழக்கமான பாணியில் அட்டகாசமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால்இ அவர் கொல்கத்தா அணியை 100 ரன்களை கடக்கச் செய்தார்.
கடைசி ஓவரில் மட்டும் அவர் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளை அடித்தார். இதன்மூலம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி பந்தில் பவுண்டரி அடித்ததன் மூலம் ரஸல் தனது அரைசதத்தையும் எட்டினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 44 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 50 ரன்கள் எடுத்தார்.
சென்னை அணி சார்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் மற்றும் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பேசிய தோனி பேசியதாவது …
ஹர்பஜன் சிங் எப்போது எந்த இடத்தில் இருந்தாலும் நன்றாக ஆடுவார். தாஹிர் தனது வேலையை சரியாக செய்து விட்டார். இவர்கள் இருவரும் தான் இன்றைய போட்டியின் வெற்றிக்கு காரணம். அவர்கள் இருவரும் சரியான இடத்தில் பந்தை வீசினார்கள் என்று பேசினார் தோனி.